சபரிமலையில் மகரஜோதி: பெருந்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மகர ஜோதியை வழிபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மகரஜோதியை முன்னிட்டு, ஜன.19ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டுள்ளது. மகரஜோதியைக் காண விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தா்கள் பதினெட்டாம் படி ஏறி, ஐயப்பனை தரிசிப்பர்.
மகரஜோதிக் காலத்தில் காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் குவிந்தது.
மாலை மகரஜோதியைக் கண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகரஜோதியையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Leave A Comment