• Login / Register
  • ஆன்மிகம்

    சூரிய பகவான் அருளினைப் பெற செய்ய வேண்டிய பரிகாரம்!

    அக்கினி நட்சத்திரம் இன்றுடன் (மே-28) நிறைவுக்கு வரும் நிலையில் சூரிய பகவானை உரிய முறையில் வழிபாடு செய்து நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

    சூரிய வழிபாடு பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு வரினும் அக்கினி வெயில் காலத்தல் மேற்கொள்ளப்படும் பரிகார வழிபாடுகள் மேலும் நற்பலன்களை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளிலும் அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாளிலும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    அதே போல தான் அக்னி நட்சத்திரம் முடிவு வரும் நாளிலும் நாம் சில விஷயங்களை கடைப்பிடிக்கும் பொழுது நம்முடைய குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    அது என்ன என்றும் எப்படி எல்லாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    செல்வம் பெருக அக்னி நட்சத்திரம்

    இன்றைய (28.05.2024) தினம் அக்னி நட்சத்திரம் முடிவு பெறுகிறது. இதன்போது சூரிய பகவானுக்கு சில பரிகார முறைகளை செய்வதன் மூலம் பல வித நன்மைகளை நாம் பெறலாம்.

    தொழில் முன்னேற்றத்திற்கு கோதுமை தானம்

    அதில் முதலாவதாக சூரியனுக்கு உகந்த தானியமான கோதுமையை வைத்து செய்வது.

    நம் வீட்டில் அருகில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு ஒரு கிலோ அளவு கோதுமை மாவு அல்லது கோதுமை தானியம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தானமாக வழங்க வேண்டும். இதன் மூலம் நமக்கு சூரிய பகவானின் அருளாசி கிடைத்து தொழில் வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

    செல்வ வளம ;பெருக வஸ்திர தானம்

    அடுத்து நம் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் நவகிரக ஆலயத்திற்கு சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தை தானமாக தர வேண்டும். இது நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

    சுபகாரியத் தடை நீங்க செங்காந்தள் மலர்வழிபாடு

    இத்துடன் இன்றைய தினத்தில் நம் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு செங்காந்தள் மலர்களை சூட குடும்பத்தில் இருக்கும் சுப காரிய தடைகள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    அதே போல் வெள்ளெருக்கு செடி இருந்தால் அதற்கு கொஞ்சம் மஞ்சளை தூவி அந்தச் செடியை சுற்றி வணங்கி வர வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

    நிலையான செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட அன்னதானம்

    இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்றாக கருதப்படுவது அன்னதானம் இன்றைய தினத்தில் 11 பேருக்கு உங்களால் இயன்ற அளவு உணவு வாங்கிக் கொடுங்கள். இது உங்கள் குடும்பத்திற்கு என்றென்றும் நிலையான செல்வத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அக்னி நட்சத்திரம் முடியும் நாளான இன்றைய தினத்தில் இவை எல்லாம் நாம் செய்யும் போது நம் குடும்பம் என்றென்றைக்கும் தழைத்து அனைத்து செல்வங்களையும் பெற்று நிம்மதியாக வாழும் என்று சொல்லப்படுகிறது.

    நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து பலனடையலாம்.

    Leave A Comment