மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அன்பில் மகேஷ் - மருத்துவமனை அறிக்கை!
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (12) மதியம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு வலி நிவாரணிகள் மற்றும் திரவங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 12-ம் தேதி மதியம் மேல் வயிற்று பகுதியில் அவருக்கு வலி ஏற்பட்டதால் நாராயணா ஹிருத்ராலயா மருத்துவமனையில் இன்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வலி மற்றும் திரவ நிவாரணிகள் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment