தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு திகதி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பாடசாலைகள் மீள திறக்கப்படுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகிறுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் முடிவின்படி தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக் கூடிய காலம். கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை முன்னதாக தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்ததுவந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment