பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தாமதாகும்..? - இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்பம் தணியும் வரை பாடசாலைகள் மீள திறக்கப்படுவதை மேலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று அது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தாலும் தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது.
இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இதுகுறித்து சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
மேலும் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அல்லது திட்டமிட்டபடி திறக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று அறிவிக்க உள்ளார்.
Leave A Comment