• Login / Register
  • முகப்பு

    சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்!

    மாதத்தின் முதல் நாளான இன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2192.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.
     
    எனினும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமின்றி  ரூ. 1,118.50  ஆகவே நீடித்து வருகிறது. கடந்த மாதம் ரூ.50 உயர்ந்த நிலையில், தற்போது விலையில் மாற்றம் இல்லாதது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment