• Login / Register
  • முகப்பு

    இலங்கை: எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

    இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

    நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தற்போது இடம்பெறும் விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

    அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

    அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

    மேலும் ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறே சுப்பர் டீசல் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

    மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

    டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்ட விலை மாற்றத்திற்கமைவாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment