• Login / Register
  • முகப்பு

    18 மருந்து நிறுவனங்களுக்கு தடை; மத்திய அரசு நடவடிக்கை!

    தரமற்ற இந்திய தயாரிப்பு மருந்துகளால் உஸ்பெகிஸ்தான் மற்றும் காம்பியா நாடுகளில் பல குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த விவகாரத்தை அடுத்து உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கமைவாக 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான் மற்றும் காம்பியா நாடுகளில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அத்துடன், இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் 55 பேரின் கண்பார்வை பறிபோனதுடன் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் இந்திய அரசிடம் அறிவுறுத்தியது.

    இதையடுத்து, டெல்லி, பிகார், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சோதனை நடத்தியது.

    மத்திய, மாநில அரசுகளின் சுகாதார குழுக்கள் ஒன்றிணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில் தரமற்ற வகையில் மருந்துகள் தயாரித்தது உறுதி செய்யப்பட்டதால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், 26 மருந்து நிறுவனங்களிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Leave A Comment