• Login / Register
 • சோதிடம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2023-2024 - மீனம் ராசியினருக்கு எப்படி?

  முழு சுப கிரகமான குரு கிரக பெயர்ச்சி என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதற்கமைவாக இடம்பெற்றுள்ளது.

  அந்த வகையில்2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார்.

  இதன் அடிப்படையில் எதிர்வரும் 2023 - 2024 ம் ஆண்டு காலப்பகுதி வரையயில் மீனம் ராசியினருக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படப் போகின்ற பலன்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

  மீனம்
  (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

  பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

  மீன ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்படப் போகின்ற குருபெயர்ச்சியால் எதிர்பாராத சிறு சிறு வீண் விரயங்கள் ஏற்படும்.

  மனைவி வழி உறவினர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும் என்றாலும் பொருளாதார நெருக்கடி இருக்கும். பழைய வாகனங்களை விடுத்து, புதிய வாகனங்களை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும்.

  சகோதரர்களால் பெரிய உதவிகள் ஏதும் இருக்காது. பழைய கடன்களை அடைப்பதற்குள்ளாக படாத பாடு பட வேண்டியிருக்கும். சிலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் உடல் நலக் கோளாறுகள் உண்டாகி, மருத்துவ செலவுகள் ஏற்படும்.

  அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் பறிபோகும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.

  தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். வருடத்தின் பிற்பகுதியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

  குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும்.

  கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.

  மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

  பூரட்டாதி 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

  உத்திரட்டாதி: இந்த குரு பெயர்ச்சியால் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

  ரேவதி: இந்த குரு பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

  பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

  Leave A Comment