• Login / Register
 • சோதிடம்

  குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 - மகரம் ராசியினருக்கு எப்படி?

  முழு சுப கிரகமான குரு கிரக பெயர்ச்சி என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதற்கமைவாக இடம்பெற்றுள்ளது.

  அந்த வகையில்2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார்.

  இதன் அடிப்படையில் எதிர்வரும் 2023 - 2024 ம் ஆண்டு காலப்பகுதி வரையயில் மகரம் ராசியினருக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படப் போகின்ற பலன்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

  மகரம்
  (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)

  பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், பார்க்கிறார்.

  மகர ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்படும் குரு பெயர்ச்சியால் எதிர்பாராத பொருள் விரயங்கள் ஏற்படும். மனதில் குழப்பமான நிலை இருக்கும்.

  அரசாங்க ரீதியான காரியங்களில் சுலபத்தில் வெற்றி கிடைக்காது.

  அக்கம், பக்கம் வசிப்பவர்களுடன் வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும். சிலருக்கு நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும்.

  தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சக போட்டியாளர்களின் சவாலை எதிர்கொள்ள திணறும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.

  கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

  பெண்களுக்கு பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.

  அரசியலில் இருப்பவர்களுக்கு கத்தி மேல் நடப்பது போன்ற சூழல் நிலவும். தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள்.

  மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் கல்வியில் பின் தங்க கூடும். கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

  கலைஞர்கள், சக கலைஞர்களின் துரோகத்திற்கு ஆளாக நேரிடும். வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வருடத்தின் பிற்பகுதியில் பொருளாதார நிலை ஏற்றம் பெறும்.

  உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சினைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

  திருவோணம்: இந்த குரு பெயர்ச்சியால் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

  அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

  பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்

  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

  Leave A Comment