• Login / Register
 • சோதிடம்

  தை மாத ராசி பலன்கள்!

  2023 தை மாதத்திற்கான (15/01/2023 - 12/02/2023) 12 ராசிகளுக்குமான பலன்கள்.

  நவகிரகங்களில் சூரியனே முதன்மையான கிரகமாக இருக்கிறது. இந்த சூரியன் மகரத்தில் சஞ்சரிப்பதால் இம்மாதம் உலக உயிர்கள் அனைத்திற்கும் புத்துணர்வும், புது தென்பும் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக அமையும். எத்தகைய இடர்கள் நேரினும், அத்தனையையும் எதிர்கொள்ளக் கூடிய வல்லமை சூரிய பகவான் வழங்குவார். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த இந்த தை மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது? என்பதை தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

  மேஷம்:

  மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு குறைய தொடங்கும். எவரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்து அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் சீராக இருக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். சிலருக்கு பொருச்சேர்க்கை ஏற்படலாம். கல்வி விஷயத்தில் காம்ப்ரமைஸ் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்து மறையும். பரிகாரமாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

  ரிஷபம்:

  ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் பெற்றோர்களுடன் உறவு மேம்படும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்தது சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இல்லாத ஆதரவு மேலிடத்திலிருந்து கிடைக்கப் போகிறது. பொருளாதாரம் படிப்படியாக உயரும். அண்டை நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் கனவு நிறைவேற வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள். பரிகாரமாக செவ்வாயில் முருக வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

  மிதுனம்:

  மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மனம் சொல்வதைவிட புத்தி சொல்வதை கேட்டு நடப்பது நன்மை தரும் அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மனதை அலைபாய விடாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையாக இருப்பீர்கள். பெற்றோர்களுடைய கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தகாத நண்பர்களால் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். பொருளாதாரம் உயரும். ஆரோக்கியத்தில் தொடர் கண்காணிப்பு தேவை. பரிகாரமாக சஷ்டி விரதம் இருப்பது நன்மை தரும்.

  கடகம்:

  கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் துணிச்சலுடன் செயல்படக்கூடிய தன்னம்பிக்கை நிறைந்த அமைப்பாக இருக்கிறது. எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அதனை மனம் தளராமல் எதிர்கொள்வீர்கள். குடும்ப தேவைகளை அறிந்து திருப்தி படுத்த முயற்சி செய்வீர்கள். எதிலும் அகல கால் வைக்காமல் படிப்படியாக செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணரீதியான நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம். பொருளாதாரம் சீராக இருக்கும். கல்வி விஷயத்தில் மாணவர்கள் சோம்பல் அகற்றுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் இல்லையேல் ஆபத்து வரலாம். பரிகாரமாக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

  சிம்மம்:

  சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வீண் அலைச்சலை சந்திக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பண தேவைகளை சாமர்த்தியத்துடன் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் திறமை பன்மடங்கு விஸ்தரிக்க இருக்கிறது. குடும்ப பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விஷயத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் வேண்டும். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் அவசரப்பட வேண்டாம். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மாணவர்கள் கல்வி விஷயத்தில் விடாமுயற்சி செய்வது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை உடனே கவனியுங்கள். பரிகாரமாக திங்கள்கிழமை அன்று சிவ வழிபாடு மேற்கொண்டு வாருங்கள்.

  கன்னி:

  கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மூக்கையும் நுழைத்தால் நிம்மதி பறிபோக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்கு தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஒற்றுமை பல சமயங்களில் உங்களுக்கு உதவி செய்யும் என்பதை நினைவில் கொண்டு ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்தது நல்லது. கல்வி விஷயத்தில் மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ஆரோக்கியத்தை இருந்து வந்த குறைகள் படிப்படியாக குறையும். பரிகாரமாக அம்பாள் வழிபாடு மேற்கொண்டு வாருங்கள்.

  துலாம்:

  துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மனம் போன போக்கில் செல்ல வேண்டாம். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் அவ்வபோது வந்து செல்லும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உங்கள் மீதான தவறான மதிப்பு மாற துவங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குறுக்கு வழியில் புத்தி செல்லும் எதிர்மறை எண்ணங்களை விரட்டியடித்து மனக்கட்டுப்பாடு கொள்வது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேராசை பெருநஷ்டம் ஆகலாம் கவனம் வேண்டும். பொருளாதார ரீதியான ஏற்றம் சீராக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப்பெறும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த நிலை மாற துவங்கும். உடற்பயிற்சி மேற்கொள்ளும் எண்ணத்தை உறுதிப்படுத்துவது நல்லது. பரிகாரமாக லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள்.

  விருச்சிகம்:

  விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய சிந்தனைகள் உதிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுக முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுடைய கடமைகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பல வகைகளில் வெற்றி கிடைக்க விடாமுயற்சி தேவை. சோர்ந்து போகும் பொழுது நண்பர்களின் உதவிக்கரம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடியாப்ப சிக்கல் போல் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வர இருக்கிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பரிகாரமாக சனிக்கிழமைகளில் சனி வழிபாடு தவறாமல் செய்யுங்கள்.

  தனுசு:

  தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டங்களை அடைய வாய்ப்புகள் உள்ள நல்ல மாதமாக இருக்கிறது. எப்படிடா சமாளிக்க இருக்கிறோம் என்கிற பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி படுத்துவீர்கள். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய சலுகைகளை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் உத்வேகத்துடன் இருப்பது நல்லது. எதிலும் ஈடுபாடு காண்பிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறு அலட்சியமும் ஆபத்தில் முடியும் கவனம் வேண்டும். பரிகாரமாக குரு வழிபாடு வியாழன் கிழமையில் மேற்கொள்ளுங்கள். 

  மகரம்:

  மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கடும் போட்டிகளை சமாளிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. எவரையும் நேருக்கு நேர் எதிர் கொள்ளுங்கள். புரணி பேசாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. பேச்சில் இனிமை வேண்டும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய விஷயத்தில் தேவையில்லாத கட்டப்பஞ்சாயத்து செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால கனவு ஒன்றுக்கு அஸ்திவாரம் போட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மந்தமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். பரிகாரமாக பித்ரு வழிபாடுகளை முறையாக மேற்கொள்ளுங்கள்.

  கும்பம்:

  கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் தந்திரமாக செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிலும் அவசரமில்லாமல் சாமர்த்தியமாக முடிவெடுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சரிசமமாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒருவரை உயர்த்தியும் ஒருவரை தாழ்த்தியும் பேசாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை பொறுமையுடன் கையாள முயற்சிப்பது நல்லது. எல்லாவற்றையும் இழுத்து போட முயற்சி செய்யாதீர்கள் பிறகு எதையும் செய்ய முடியாமல் போய்விடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படுவதில் இருந்து வந்த தடைகள் அகலும். மாணவர்கள் உயர்கல்விக்கு சற்று போராடி தான் வெற்றி காண வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் வேண்டும். பரிகாரமாக ஸ்ரீமன் நாராயணனை வழிபடுங்கள்.

  மீனம்:

  மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சறுக்கல் நிறைந்த மாதமாக இருக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் வந்த வழியே செல்லும். இருக்கிறதே என்று தாம் தூம் என்று செலவு செய்யாதீர்கள் பிறகு கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். சேமிப்பு தகுந்த சமயத்தில் கை கொடுக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் திட்டமிடுதல் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால தொந்தரவுகள் மறையும். அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மாணவர்களுடைய கல்வியில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும். ஆரோக்கியத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம் கவனம் வேண்டும். பரிகாரமாக வாரம் தவறாமல் அம்பிகையை வழிபடுங்கள்.

  Leave A Comment