• Login / Register
  • சோதிடம்

    வக்கிர நிலையில் சனி பகவான்; 139 நாட்களுக்கு யோகம் பெறும் ராசிகள்?

    சனி பகவான் வக்கிர நிலையை அடையும் 139 நாட்களும் சில ராசியினருக்கு யோக பலன்கள் கிடைக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    30 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த வீடான கும்பத்தில் சஞ்சாரம் செய்து வரும் சனி பகவான் வரும் ஜூன் மாதம் வக்கிர நிலையை அடைய உள்ளார்.

    நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பித் தருவதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை. ஆகையாலே சனி பகவானை கண்டால் அனைவருக்கும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும்.

    சனிபகவானை பொறுத்த வரையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலே மெதுவாக நகரக் கூடியவர் இவர் தான்.

    அப்படியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழும்.

    இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி கும்ப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இதன் பிறகு 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

    இதனால் சில ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்க போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    சனியின் வக்கிர நிலையால் யோகம் பெறும் ராசிகள்

    கன்னி ராசி:

    சனியின் இந்த வக்கிர நிலையால் உங்களுக்கு பல அபரிதமான யோகங்கள் வரப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், உறவுகளின் ஆதரவும் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். பணவரவில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிதிநிலை பல மடங்கு முன்னேற்றமாக இருக்கும்.

    துலாம் ராசி:

    சனி பகவானின் இந்த மாற்றமானது உங்களுக்கும் பெரிய அளவில் யோகத்தை கொடுக்கப் போகிறது. கை விட்டுப் போன அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். சிக்கல்கள் குறையும் வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு அதிக குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டங்கள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    மீன ராசி:

    சனியின் இந்த வக்கிர பெயர்ச்சியால் உங்களுக்கும் பல யோகங்கள் உண்டு. வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். வியாபாரம் துறையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இது வரை இருந்து வந்து மந்தமான சூழ்நிலை மாறி லாபம் அதிகரிக்கும். பணவரவில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். நிதி நிலைமை சீராகும். வேலைவாய்ப்பில் புதிய நல்ல மாற்றங்கள் உருவாகும்.

    இது பொதுவான பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள். ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.

    Leave A Comment