இந்த மாதம் எப்படி இருக்கு? ஆவணி மாத ராசிபலன்கள் (சிம்மம் - விருச்சிகம் வரை)!
பிறந்துள்ள ஆவணி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், சிம்மம் - விருச்சிகம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆவணி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனக்கவலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடலாம்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அலைச்சல் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற வீண் பேச்சுகளை பிறரிடம் பேசாமல் இருப்பது முன்னேற்றத்திற்கு நல்ல வழி காட்டும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பாமல் தாமே அந்த வேலையை செய்வதால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் போட்டிகளை சமாளிக்கும் அளவிற்கு தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களால் வெற்றிகள் உண்டாக்கும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். செலவுகளும் குறைவாகவே இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. புதிய நபர்களின் தொடர்பால் நன்மைகள் உண்டாகும். வருமானம் பெருகும். பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல பெயரை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் மருத்துவ செலவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலை ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் வெற்றிகள் உண்டாகும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கடுமையாக முயற்சி செய்வீர்கள். இதுவரை தொழிலில் இருந்து வந்த எதிரிகள் பிரச்சனை முற்றிலும் நீங்கும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாராயணரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொள்வது நல்லது. எந்த அளவிற்கு தன்னுடைய உடல்நலத்தில் கவனமாக இருக்கிறீர்களோ அதே அளவிற்கு குடும்பத்தாரின் உடல் நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லவும் நேரிடும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். முடிந்த அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்தி செலுத்துவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பழனி முருகனை வழிபட வேண்டும்.
Leave A Comment