• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஆவணி மாத ராசிபலன்கள் (மேஷம் - கடகம் வரை)!

    பிறந்துள்ள ஆவணி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆவணி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகளை தரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் எளிதில் நடந்திடும். திருமணம் முயற்சிகள் வெற்றி அடையும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தாலும் புதிய தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இந்த மாதம் சிறப்பான பலன்களை பெற முடியும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நன்மையை தரும். பழைய வீட்டையோ வாகனத்தையோ புதுப்பிக்கும் சூழ்நிலை உண்டாகும். சிறிய முயற்சி கூட மிகப் பெரிய வெற்றியைத் தரும். உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் பெறுவதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது நல்லது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது என்பது சற்று சிரமமாக இருக்கும். அதே சமயம் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையேல் அதனால் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொண்டு அகலக்கால் வைக்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரகதீஸ்வரரை வழிபட வேண்டும்.

    Leave A Comment