• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஆடி மாத ராசிபலன்கள் (மேஷம் - கடகம் வரை)!

    பிறந்துள்ள ஆடி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆடி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை தரும் மாதமாக திகழப் போகிறது. இருப்பினும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி ஆதரவு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

    குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் பேச வேண்டும். எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்தி செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பணி சுமை அதிகமாக இருக்கும். அதனால் வேலையை திட்டமிட்டு செய்வதன் மூலம் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உணர்ச்சிவசப்படக் கூடிய மாதமாக திகழப் போகிறது. எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் சற்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உரிய ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுப்பது நல்லது. எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.

    பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு மேம்படும். எந்த வேலையாக இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு செய்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரகாசமான மாதமாக திகழப் போகிறது. தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். நேர்மறையான கண்ணோட்டம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    நோய்கள், மனக்கவலை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். அதே சமயம் வீண் விரையமும் ஏற்படும். தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் திறமையும் மதிப்பும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. நான் தான் பெரியவன் என்ற எண்ணம் மேலோங்கும். மனம் மற்றும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பம் மற்றும் வேலை தொடர்பாக சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

    மன உறுதியுடன் செயல்பட்டு அனைத்து வேலையிலும் வெற்றியைப் பெற முடியும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நகைகள் ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment