இந்த மாதம் எப்படி இருக்கு? ஆடி மாத ராசிபலன்கள் (சிம்மம் - விருச்சிகம் வரை)!
பிறந்துள்ள ஆடி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், சிம்மம் - விருச்சிகம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆடி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. செலவுகளில் கவனம் செலுத்தி புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் பணத்தை சேமிக்க முடியும். பணவரவு அதிகரித்தாலும் வீண் விரையத்தால் பண விரயம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளது. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை தாமதிக்காமல் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல நிலைக்கு முன்னேற முடியும். வெளிநாடு செல்லும் யோகம் சாதகமாக உள்ளது.
இந்த வாரம் இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி நாராயணரை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவு அதிகரிக்கும். பல வழிகளிலும் வருமானம் உண்டாக்கும். உடல் நலனில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த படி நிறைவேறும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
வேலையில் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பிறரிடம் பேசும் பொழுது தேவையற்ற வாக்குறுதிகள் தருவதை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மையான மாதமாக திகழப் போகிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. வேலைக்காக குடும்பத்தை விட்டுக் கொடுக்காமலோ அல்லது குடும்பத்திற்காக வேலையை விட்டுக் கொடுக்காமலோ சமநிலைப்படுத்தி செய்வதன் மூலமே நல்ல ஒரு உயர்வை பெற முடியும்.
நல்ல செய்தி வீடு தேடி வரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகள் பல வழிகளில் தேடி வரும். வேலை மற்றும் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயர்வதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடன் குறைய ஆரம்பிக்கும். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று கவனத்துடன் பழகுவது நல்லது. வேலை மற்றும் தொழிலை சிறப்பாக செய்து அதில் பாராட்டும் பெறுவீர்கள்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. லட்சியத்தை அடைவதற்கு உற்சாகமாக செயல்படுவீர்கள். எந்த செயலிலும் கவனமாக செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். விரும்பிய சலுகை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாக்கும்.
சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கடந்த மாதங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். முன்னேற்றத்திற்குரிய வாய்ப்புகள் பல வரும். அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெற வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த வாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
Leave A Comment