• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 30 ஜூலை 2024!

    செவ்வாய்கிழமை

    30 - 07 – 2024

    குரோதி ஆண்டு – ஆடி - 14 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்கள் இன்று அயராது உழைத்தால் மட்டும் தான் உங்களுடைய வேலையில் வெற்றி காண முடியும். சோம்பேறித்தனத்தோடு இருப்பவர்களுக்கு பெரிய இழப்புகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு இன்றைய நாளை தொடங்கவும். புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். தொழிலில் வரும் சிக்கல்களை சந்திக்க நிறைய சிந்திக்க வேண்டி இருக்கும். இன்றைய நாளை கவனத்தோடு நகர்த்தி செல்லுங்கள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை தைரியம் கொஞ்சம் குறைந்து காணப்படும். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் மனது தெளிவாக இருக்காது. குழப்பம் நிறைந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் பாதகமாக அமைந்துவிடும். புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி வைக்கவும். முக்கியமான விஷயம் என்றால் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். நீங்களே உங்க இஷ்டத்துக்கு எதுவும் செஞ்சுறாதீங்க பாத்துக்கோங்க.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பெரிய அளவில் சாதித்து காட்டுவீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகள் முன்பு காலரை தூக்கி விட்டு செல்லும் அளவுக்கு வெற்றிவாகை சூடுவீர்கள்.

    கடகம்:

    கடக ராசி காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சக ஊழியர்களோடு நட்புறவு பழகுவீர்கள். பகை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது சந்தோஷமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையில் சின்ன சின்ன தடைகள் வரலாம். உங்களை குறை கூற நாலு பேர் இருக்கலாம். அதை எல்லாம் சமாளிக்க கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. இருந்தாலும் உன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வார்த்தைகளைக் கொண்டு பேசாதீர்கள். பொறுமையாக இருந்தால் இன்று நிறைய சாதிக்கலாம்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் சவால் விடக்கூடாது. ஒரு காரியம் நல்லபடியாக நடந்து முடிவதற்கு முன்பாக உறவுகளிடம் நண்பர்களிடம் தம்பட்டம் அடைக்காதீர்கள். தன்னடக்கம் இன்று உங்களுக்கு நன்மையை செய்யும். குறைவாக பேசுங்கள் அதிகமாக வேலையை செயல்படுத்துங்கள்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் இருக்காது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு இன்றைய நாளை தொடங்குவது சிறப்பு.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். சில பேர் அலட்சியம் காரணமாக வாய்ப்புகளை நழுவ விடவும் செய்வீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள். முயற்சி செய்து பார்த்து தோற்பதில் தவறு கிடையாது. முயற்சி செய்யாமலேயே என்னால் முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம் வந்துவிட்டால் இந்த நாள் இறுதியில் எல்லாம் ஒன்றாக சேர்ந்து நிற்கும். பிறகு தலைபாரம் வருவதற்கு தான் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்து, வேலைகளை இந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற டார்கெட் வச்சா இன்னைக்கு நீங்க ராஜா தான்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக் கொள்வீர்கள். உங்களுடைய திறமைகளை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள். தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் ஒரு ஒரு நம்பிக்கையோடு சில முடிவுகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கான நல்லது இன்று நிச்சயம் நடக்கும். மனைவியின் அனுசரணையான பேச்சு ஊக்கத்தை கொடுக்கும் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மனசோர்வு உண்டாகும். புதிய வேலை தேடிக் கொள்ளலாம் என்று இருக்கும். வேலையை விட்டுவிடலாம் என்று சில பேர் ரொம்பவும் நொந்து போய் இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு காலமும் நேரமும் சரியில்லாத காரணத்தால் தான் பிரச்சனை வருகிறது. ஒரு சில நாட்கள் கழித்து இந்த நிலைமை மாறும். பொறுமை காக்கவும். அவசரப்பட்டு எந்த ஒரு எதிர்மறை முடிவையும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்க வேண்டும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பெரிய மனிதர்களின் நட்பு வாழ்க்கையில் நல்ல பாடங்களை கற்றுக் கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    Leave A Comment