இன்றைய நாள் எப்படி? 21 ஜூலை 2024!
ஞாயிற்றுக்கிழமை
21 - 07 - 2024
குரோதி ஆண்டு – ஆடி – 05 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் எந்த ஒரு வேலையிலும் மனது ஈடுபடாது. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். இன்ற மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். நிதி நிலைமை சீராகும். தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சாந்தமான மனநிலையில் இருப்பீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் இன்று நிதானமாக யோசித்து அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன தவறுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதையும் திருத்திக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்வதற்கு உண்டான பண உதவி கிடைக்கும். நல்லது நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் பிரிந்த உறவு நண்பர்களுடன் மீண்டும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. சந்தோஷமாக இன்று நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் சுமூகமான போக்கே நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். நிதிநிலைமை மேலோங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போக வாய்ப்பு இருக்கின்றது. விடுமுறை நாளாகவே இருந்தாலும் வேலையில் உங்களுக்கு பிரஷர் இருக்கும். சில வேலைகளை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். இதனால் குடும்ப சந்தோஷத்தை மிஸ் பண்ணுவீங்க. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீட்டிற்கு தேவையான வங்கி கடன் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுகள் மீண்டும் நடக்க தொடங்கும். காதல் திருமணம் வரை செல்லும். வேலையில் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. தொழிலில் சின்ன சின்ன முட்டுக்கட்டைகள் தடைகள் வரலாம். அதை தகர்க்க வேண்டும் என்றால் நீங்கள் தான் அயராது உழைக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் நேரம் ஆவது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக அலைச்சல் இன்று பிரச்சினையை கொடுக்கும். தொழிலில் வரவு செலவு கணக்குகளை கொஞ்சம் கவனத்தோடு பார்க்கவும். யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். ரொம்பவும் சிரமமான வேலைகளை கூட நீங்கள் சுலபமாக முடித்து விடுவீர்கள். நாலு பேருக்கு பஞ்சாயத்து செய்ய முன்பாக போய் நிற்பீர்கள். உங்களுடைய கௌரவமும் மரியாதையும் கொஞ்சம் உயரக்கூடிய நாள் இன்று. ஆனால் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய வேலை செய்வீங்க. ஆனா ஒரு வேலை கூட உருப்படியாக முடியாது. ஏதாவது ஒரு பிரச்சினை இறுதியில் முட்டிக்கொண்டு நிற்கும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கிறது. கவலை வேண்டாம். விடா முயற்சி நிச்சயம் உங்களுக்கு விஸ்வரூப வெற்றி கொடுக்கும். இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரிடம் நல்ல நட்புறவு பழகுவீர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு மன உறுதியை கொடுக்கும். நாமும் இவர்கள் போல வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு வாழ்க்கை பாதையில் புதுசாக சில நல்ல விஷயங்களை இணைத்துக் கொள்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும். சின்ன சின்னதாக பண இழப்பு பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கண்மூடித்தனமாக மூன்றாவது நபரை நம்ப வேண்டாம். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். டிஸ்கவுன்ட் சேலில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம். குறிப்பாக விலைமதிப்பற்ற பொருட்களை இன்று வாங்காதீங்க. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வீட்டு வேலைகளில் ஆர்வம் எடுத்துக் கொள்வீர்கள். வாழ்க்கை துணையிடம் பணிவாக பேசுவீர்கள். பேச்சால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அதில் உங்களுடைய சுயநலமும் அடங்கி இருக்கும். இருந்தாலும் கர்வம் குறையும். நிதிநிலைமை சீராகும்.
Leave A Comment