இன்றைய நாள் எப்படி? 05 செப்டெம்பர் 2024!
வியாழக்கிழமை
05 – 09 - 2024
குரோதி ஆண்டு – ஆவணி – 20 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருந்தாலும், மனது ஏதோ ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டே இருக்கும். குடும்பம், செலவு, மனைவி பிரச்சனை, குழந்தைகள் பிரச்சனை, எதுவாக இருந்தாலும் சரி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குழப்பத்தோடு நாம் செய்யும் வேலை நமக்கு மனநிறைவை கொடுக்காது. கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் முழு கவனத்தை செலுத்துவது சிறப்பு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் எடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும். தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்து யோசித்து செயல்படுவீர்கள். இதனாலேயே கொஞ்சம் தாமதம் ஏற்படும். இன்றைய நாள் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் தான் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். எந்த ஒரு பதட்டமும் இருக்காது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் கில்லி போல முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விநாயக சதுர்த்திக்கு தேவையான வேலைகளை இன்றே துவங்கி விடுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்கூபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் செவி கொடுத்து கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும். அடுத்தவர்களை உதாசீனப்படுத்தும் போது சில பிரச்சனைகள் வரலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் இருக்கும். எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடந்தாலும், ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து பயந்த சுபாவத்தோடு செயல்படுவீர்கள். இதனால் சில நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகலாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். இன்று பேசினால் மட்டும் தான் உங்களுக்கு நல்லது நடக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். புதிய எதிரிகள் உருவாகலாம். பயப்படாதீங்க, உங்களுடைய வழி நேர் வழியாக இருந்தால் எதற்கும் நீங்கள் கவலைப்பட தேவை கிடையாது. மடியில் கனம் இருப்பவர்களுக்கு தான் வழியில் பயம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைகூடி வரக்கூடிய நாளாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளை பற்றிய பேச்சுக்கள் வீட்டில் அடிபடும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் ஏற்பட்ட இடர்பாடுகள் விலகும். நஷ்டம் லாபமாக மாறும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது முழுக்க ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். மனநிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். யாரை நல்லவர்கள் யாரை கெட்டவர்கள் என்று யூகிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பீர்கள். இதனால் யார் மீதும் பழி போட்டு பேசாதீங்க. உங்களுக்கு பிரச்சனை வந்தால் கூட பொறுமையாக இருங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை சுட்டிக்காட்டி பேசும்போது இன்று பிரச்சனைகள் வரும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வருமானத்தை மீறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வேறு வழியே இல்லை செலவை சமாளிக்க முடியவில்லை என்றால் மட்டும் கடன் பக்கம் திரும்புங்கள். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. மற்றபடி வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல செல்லும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகள் உங்களுடைய நிலைமையை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் பேசும்போது கவனத்தோடு இருக்க வேண்டும். நல்லது நடக்குது என்பதற்காக எல்லாம் நல்ல விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்லி விடாதீங்க. உங்களுடைய வாய் உங்களுக்கு பிரச்சனையாக வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் பெருமையை நீங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கான புகழ்ச்சியை நீங்களே கேட்டு வாங்க கூடாது.
Leave A Comment