• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 04 செப்டெம்பர் 2024!

    புதன்கிழமை

    04 – 09 - 2024

    குரோதி ஆண்டு – ஆவணி – 19 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு செய்வீர்கள். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் தண்டனை கிடைத்தால் கூட அதை இன்பமாக பெற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாம். கைநிறைய லாபத்தை பெறுவீர்கள். தினம் தினம் வியாபாரம் செய்து லாபத்தை எடுப்பவர்களுக்கு கூட இன்று வருமானம் அதிகமாக இருக்கும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் மீது இறக்கப்பட்டு நிறைய உதவி செய்வீர்கள். மனநிறைவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன தடைகள் எல்லாம் சரியாகும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். பொன் பொருள் சேர்க்கை உண்டு. நிலம் வீடு வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளை எல்லாம் தோல்வி அடையச் செய்து வெற்றி காண்பதில் குறியாக இருப்பீர்கள்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை உங்கள் பேங்க் அக்கவுண்ட் வந்து சேரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு அதிகரிக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. நல்லதே நடக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். அமைதியாக இருங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. தொழிலில் கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். முன்பின் யோசிக்காமல் செயல்படக் கூடாது.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணம் சிக்கலை உண்டாக்கும். இன்று பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் இரண்டு பேர் வேலையை, ஒன்றாக உங்கள் தலைமையில் கட்டி விடுவார்கள். இதனால் கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிறைய தண்ணீர் குடிங்கள். டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். நகையை அடமானம் வைக்க வேண்டாம். தொழிலில் புதிய முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மற்றபடி வேலையில் நல்லது நடக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் இருக்கும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லாபத்தை எடுப்பீர்கள். விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். பணத்தை இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி உங்கள் ஆழ் மனதில் இருக்கும். நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் உடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் பெறுவீர்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காலையில் இந்த நாள் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், இன்று மாலை கனகச்சிதமாக உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விடுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாளாக இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்து போன உறவு சண்டை போட்டுக் கொண்டு சென்ற உறவு எல்லாம் மீண்டும் வந்து சேர்ந்து விடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை கரம் பிரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக முடியும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்க்கை, ராஜ உபசாரம் கிடைக்கும். என்ன என்று சொல்லத் தெரியாது. ஆனால் மனசு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். யாராவது வந்து திட்டினால் கூட அதை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வீர்கள். முடிந்தால் இன்று மாலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வருவது மேலும் நன்மையை அதிகப்படுத்தும் .

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு உங்கள் வேலை காலை முதலே தொடங்கிவிடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். வாழ்க்கை துணை உடன் நல்ல புரிதல் இருக்கும். சொந்த பந்தங்களோடு பிரச்சனைகள் வந்தாலும் அனுசரித்து செல்ல வேண்டும். எந்த சொந்தத்தையும் வெட்டி விட வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

    Leave A Comment