• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2023

  ஞாயிற்றுக்கிழமை

  17 - 09 - 2023

  சோபகிருது ஆண்டு – ஆவணி – 31 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கக் கூடாது. பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். நேர்வழியில் நடக்க வேண்டும். சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற நோக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான எந்த காரியத்திலும் ஈடுபடக் கூடாது. அதே சமயம் சூதாட்டமும் வேண்டாம். நேர்மையாக இருந்தால் இன்று வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிகாரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். நேரத்திற்கு சாப்பிட்டு விட வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். உடலுக்கு சூட்டை தரும் அசைவ சாப்பாட்டை தொடக்கூட வேண்டாம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் நிறைய நேரம் ஓய்வு எடுப்பீர்கள். நல்ல சாப்பாடு இருக்கும். குழந்தைகளோடு மனநிறைவோடு விளையாடி நேரத்தை கழிப்பீர்கள். சொந்தத் தொழிலில் எந்த சிக்கலும் இருக்காது. எப்போதும் போல லாபம் கிடைக்கும்.

  கடகம்:

  கடக ராசி காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட இன்னைக்கு ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.‌ சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியின் மூலமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஆனால் அது எல்லாம் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. சொந்த தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்கள் இன்று புன்னகையோடு வலம் வருவீர்கள். எல்லா விஷயத்திலும் நல்லது நடக்கும். வீட்டில் சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் பெண்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். பணப்பிரச்சினை தீரும். வாரா கடன் வசூல் ஆகும். சந்தோஷத்தில் மனது நிம்மதியாக இருக்கும். வீட்டில் மனைவிக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா. குடும்பத்தோடு சென்று வெளியே சாப்பிட்டு நேரத்தை குதூகலமாக கழிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் வேலைகள் கொஞ்சம் பரபரப்பாக தான் இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். அந்த அளவுக்கு தலை மேல் பாரம் இருக்கும். கவலைப்படாதீங்க உங்களுடைய முயற்சிகளில் வெற்றி இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு உண்டான பலனும் கிடைக்கும். சிரமப்படாமல் அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்றால் இன்றைக்கான பிரச்சினைகளை முடிப்பது நல்லது.

  விருச்சிகம்:

  விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செல்லுங்கள். முன்பின் தெரியாத நபரிடம் பழக வேண்டாம். எதிர்பாலின நட்பு கூடாது. இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் இருக்கும். இன்று மாலை நேரத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பொழுது சாய்வதற்குள் வீடு திரும்புவது நன்மையைத் தரும். உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எப்படி படிக்கிறாங்க. அவங்களுடைய பள்ளிக்கூட பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது நல்லது.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசை நிறைவேறும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கலில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கெட்ட நண்பர்கள் உங்களை விட்டு தானாகவே பிரிந்து செல்வார்கள். ஆகவே எதை நினைத்தும் கவலைப்படாதீங்க. குலதெய்வ வழிபாடு நீண்ட நாள் பிரச்சனையை சரி செய்து விடும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்கள் இன்று மனது போன போக்கில் வேலையை செய்யப் போகிறீர்கள். எதையுமே பிளான் பண்ண மாட்டீங்க. ஆனால் மனசு சொல்லும் விஷயம் உங்களுக்கு சரியாக அமையும். அந்த ஆண்டவனின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு முழுமையாக இருக்கிறது. நேர்வழியில் செல்லுங்கள். நல்லதை மட்டுமே நினையுங்கள். முன்கோபத்தை குறைத்து நிதானமாக சிந்தித்தால் வெற்றி நிச்சயம்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நேற்று செய்த வேலை, போன மாதம் செய்த வேலைக்கு எல்லாம் இன்று வெற்றி கிடைக்கப் போகின்றது. மன மகிழ்ச்சியுடன் மனைவியுடன் பிள்ளையுடன் இந்த நாளை கழிக்க போகிறீர்கள். உடன்பிறந்தவர்களோடு சேர்ந்து நிறைய விஷயங்களை பேசக்கூடிய நேரம் காலம் அமையும். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த சண்டே, சூப்பர் சண்டே.

  Leave A Comment