• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய ராசிபலன் – 16 செப்டம்பர் 2023

  சனிக்கிழமை

  16 – 09 - 2023

  சோபகிருது ஆண்டு – ஆவணி – 30 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை உணர்ந்து, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வோடு செயல்படுவார்கள். உங்களுடைய அணுகுமுறை அனைவரையும் ஈர்க்கும் அளவில் இருக்கும். இந்த பக்குவம் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். உங்களுடைய ஒழுக்க குணமும் அடுத்தவர்களை புரிந்து கொள்ளக்கூடிய இந்த மனோபாவம், பல நல்லதை இன்றைக்கு உங்களுக்கு காட்டிக் கொடுக்கப் போகின்றது.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் மனது ஈடுபடாது. எதையோ இழந்தது போல யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். காலையில் எழுந்தவுடன் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி தரும்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நல்ல நல்ல ஐடியாக்களும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக அமையும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணம் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளுடன் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நாலு பேர், வீட்டுக்கு பக்கத்தில் நாலு பேர், என்று உங்களை பிரச்சனைக்காக கூப்பிடவே காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களிடம் முட்டி மோதி ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம். யார் என்ன பேசினாலும் காதில் வாங்காதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிள்ளைகள் டீச்சரிடம் திட்டு வாங்குவீங்க. வேலை செய்பவர்கள் உங்களுக்கு மேலே வேலை செய்பவர்களிடம் திட்டு வாங்குவீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமையை காக்க வேண்டும். உறவினர்களிடம் கோபப்பட்டு பேசக்கூடாது.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு என்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கப் போகிறது. எல்லா விஷயத்திலும் வளர்ச்சி சீராக இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் வீட்டிற்கு வருவாங்க. சொந்த பந்தங்கள் வருவாங்க. நண்பர்கள் வருவாங்க, கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். மற்றபடி சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் சந்திக்காத நண்பரை சந்தித்து பேசி நேரத்தை கழிப்பீர்கள். மனது ஒரு கிலோ பாரத்தை இறக்கி வைத்தது போல இருக்கும். நிம்மதியான இந்த நாளை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதுசாக ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வீட்டை பராமரிப்பது ஓடாத சைக்கிள் பைக் இவைகளை சரி செய்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் வரும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சொந்த தொழிலில் புதுசா ஐடியாவை கண்டுபிடித்து புரட்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. நல்ல லாபம் நிறைந்த நாள் இது. வாரா கடன் வசூல் ஆகும். பணத்திற்கு எந்த கஷ்டமும் இருக்காது.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு தேவை. உடல் அசதி இருக்கும். மன அசதி இருக்கும். சோர்வாக காணப்படுவீர்கள். கொஞ்சம் ராத்திரியில் சீக்கிரம் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதுமே காதில் ஹெட்போன் போடும் பழக்கம் இருந்தால் அதை இன்றோடு விட்டிடுங்க. குறிப்பா வண்டி ஓட்டும் போது காதுல பாட்டு கேக்காதீங்க. வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

  Leave A Comment