• Login / Register
 • ராசி பலன்கள்

  ஜாமீன் கையெழுத்து போடாதீங்க... இந்த வார ராசி பலன்கள்!

  28/08/2023 முதல் 03/09/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை நல்லதும் நடக்கும். வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த ஒரு சின்ன விஷயத்தில் கூட அலட்சியமாக இருக்காதீங்க. அந்த ஒரு சின்ன விஷயம் தான் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய திருப்பம் முனையாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கமிஷன் தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு பை நிறைய பணம் சேரும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில வில்லங்கங்கள் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பது, வண்டி வாகனம் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மையை தரும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் குறுக்குப் பாதையில் செல்லக்கூடாது. நேர்மையோடு நடந்து கொண்டால், வரும் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேல் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். எதிர்த்து பேச வேண்டாம். பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் மூலம் பெருமை வந்து சேரும். சொந்த தொழிலில் சில விஷயங்கள் தாமதமாக நடக்கும். கவலை வேண்டாம். எல்லாம் இந்த வார இறுதியில் சரியாகிவிடும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்தில் தடை இருக்கும். பண பற்றாக்குறை ஏற்படும். செலவுகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. வாங்கிய கடனை அடுத்த மாதமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். மேலும் மேலும் கடன் பாரத்தை சுமக்காமல் இருக்க என்ன வழி இருக்கிறதோ அதை தேடுங்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. கூடுமானவரை இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள். வார்த்தையில் அதிக கவனம் தேவை. வாய் வாக்குவாதம், பெரிய கைகலப்பு அளவு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. தினமும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

  கடகம்:

  கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கும். நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று தொலைபேசி வாயிலாக உங்கள் செவிகளை எட்டும். சின்ன சின்ன விஷயத்துக்கு, சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட பெருசாக சோர்ந்து போகாதீங்க. அது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டால், வாழ்க்கையை சுலபமாக ஜெயித்து விடுவீர்கள். டேக் இட் ஈசி பாலிசி என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சொந்த தொழிலில் புதியதாக முதலீடு செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனை என்று வந்தால் உங்கள் உறவுகள் கை கொடுக்கும். பொன் பொருள் ஆபரணம் வாங்குவதற்கு இது சிறந்த நேரம். இந்த வாரம் 30, 31 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம். ஜாக்கிரதை, சிவன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக தான் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை போட வேண்டாம். கடன் வாங்கவோ கொடுக்கவோ செய்யாதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. அப்படியே வேறு வழியில்லை பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றால், ஒன்றுக்கு பலமுறை அந்த பத்திரத்தில் இருக்கும் ஒப்பந்தத்தை வாசித்து விட்டு கையெழுத்து போடுவது நல்லது. மூன்றாவது நபரிடம் ஏமாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பணவரவு இருக்கும். சொந்த தொழிலில் அமோகமான முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். சொந்த தொழிலை விரிவு படுத்த வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உங்கள் கனவு நினைவாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. விரும்பிய வேலை, விரும்பிய சம்பளத்தில் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை உடைக்கும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். எந்த ஒரு வேலையையும் எடுத்த மார்க்கத்தில் முடிக்க முடியாது. இழுபறியாக இருக்கும். ஆகவே, முக்கியமான விஷயங்களை செய்வதாக இருந்தால் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளையும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடவும். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிக்காதீங்க. சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதுதான் வெற்றியை கொடுக்கும். தினமும் முருகர் வழிபாடு நன்மையை தரும்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சில விஷயங்களை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று நேரத்தை கழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். தேவையற்ற மன சிந்தனை சில பேருக்கு, நிம்மதியை கெடுக்கும். தினமும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி மனதை ஒருநிலைப்படுத்திகோங்க.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய வாரமாக தான் அமையும். நீங்கள் நல்லது என்று நினைத்து செய்யக்கூடிய வேலைகள் கூட உங்களுக்கே கெட்டதாக திரும்பிவிடும். அதற்காக பயந்து விட வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலைகளை எப்போதும் போல செய்யுங்கள். புது மனிதர்களிடம் பழகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம், குறிப்பாக தெரியாத நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எதிர் பாலின நட்பு கூடாது. சூதாட்டம் கூடாது. நேர்வழியில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனைகள் வராது. தேவையற்ற விவகாரங்களில் தலையிடும் போது பிரச்சனை பசை போல உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். மற்றபடி வாங்கிய கடனை இந்த வாரம் திருப்பிக் கொடுத்து, மன நிம்மதி அடைவீர்கள். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மையை தரும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. யார்கிட்டயும் வாக்குவாதம் செய்யாதீங்க. முன்கோபம் படக்கூடாது. ரோட்டில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கூட அங்கு போய் நீங்க நல்லது செய்கிறேன் என்று பஞ்சாயத்துக்கு நீக்க கூடாது. அது உங்களுக்கே பிரச்சனையை கொடுத்து விடும். மற்றபடி வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குவா குவா சத்தம் கேட்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்தத் தொழிலில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. பார்ட்னராக இருந்தால் கூட கையெழுத்து போடாமல் சில விஷயங்களை செய்யாதீங்க. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மன நிம்மதி பெறுவீர்கள். சில எதிரிகள் உங்களை வீழ்த்துவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனாலும் வெற்றி கொடியை நாட்டுவது நீங்களாகத்தான் இருக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். சேமிப்பு படிப்படியாக அதிகரிக்கும். கூடுமானவரை நேர் வழியில் சென்று சம்பாதிப்பது நல்லது. குறுக்கு வழியை பின்பற்ற வேண்டாம். முன் பின் தெரியாதவர்கள் யோசனையை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் செய்யாதீங்க. அனுபவசாலிகள் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்தில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். மாத தொடக்கத்தில் சம்பளம் வந்தாலும் பணம் வந்த வழி தெரியாமல் கரைந்து போகும். கொஞ்சம் கஷ்டம் தான். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும், வேறு வழி கிடையாது. ஒரு சில மாதங்களில் இந்த கடன் சுமையிலிருந்து வெளிவரப் போகிறீர்கள். கவலைப்படாதீங்க, செலவை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வார இறுதியில் மனக்குழப்பத்திலிருந்து வெளிவந்து விடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். உங்களுடைய கஷ்டங்களை உங்கள் வாழ்க்கைத் துணை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். எந்த பிரச்சனையும் கிடையாது. சந்தோஷம் அதிகரிக்க குடும்பத்தோடு வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

  Leave A Comment