• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய ராசிபலன் – 29 மே 2023

    திங்கள்கிழமை

    29 - 05 – 2023

    சோபகிருது ஆண்டு – வைகாசி 15 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பாராத பண வரவு சிலருக்கு ஏற்படும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கும்.

    மிதுனம்:

    மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சற்று தள்ளிப் போட வேண்டும். அரசாங்க ரீதியான காரியங்களில் தாமதங்கள் ஏற்படலாம். பெண்கள் வழியில் சிலருக்கு பண வரவு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

    கடகம்:

    கடக ராசியினருக்கு இன்றைய தினம் சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசியினர் இன்றைய தினம் புதியவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

    கன்னி:

    கன்னி ராசியினர் இன்றைய தினம் குடும்பத்துடன் வெளியில் செல்வீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு உற்சாகம் ஏற்படும்.

    துலாம்:

    துலாம் ராசிக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய பணி மாறுதல் கிடைக்கும். சில தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்க வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத தன வரவு இருக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரங்களில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.

    தனுசு:

    தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் செல்வ சேமிப்பு உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உடல், மனம் உற்சாகமாக இருக்கும்.

    மகரம்:

    மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு எதிர்பாராத பொருள் விரயம் ஏற்படும். பணியிடங்களில் பணிச்சுமை கூடும். குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

    மீனம்:

    மீன ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்ப்புக்கு மீறிய லாபம் ஏற்படும். சிலர் பெரிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

    Leave A Comment