• Login / Register
  • ராசி பலன்கள்

    12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள் (22/05/2023 - 28/05/2023)

    22/05/2023 முதல் 28/05/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி நல்லதொரு வேலை கிடைக்கும். இப்படி பல வகையான நன்மைகள் உங்களுக்கு இந்த வாரம் நடந்தாலும் சில விஷயங்களில் நீங்கள் சிந்தித்து தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தால் அதை பொறுமையாக பேசி தீர்த்துக் கொள்ளவும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் நிதானம் தேவை. எதிலும் அவசரப்படாதீங்க. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஐடியாக்களை அறிமுகம் செய்து அமோகமான வரவேற்பு பெறுவீர்கள். ஆன்லைன் பிசினஸ் எதிர்பாராத வரவை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். துணிச்சலாக நீங்கள் எடுக்கக்கூடிய சில முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. இந்த வார தொடக்கத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து தொந்தரவு கொடுத்தாலும், இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். மன நிம்மதியை பெறுவீர்கள். லேசாக அலைச்சல் இருக்கும். செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீங்க. இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்வது தான் புத்திசாலித்தனம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயரும் புகழும் அதிகரிக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், அதை சாதாரணமாக போன போக்கில் முடித்துவிட்டு செல்வீர்கள். இழுபறியாக இருந்த அத்தனை விஷயத்திற்கும் இந்த வாரம் முற்றுப்புள்ளி வைக்கலாம். எல்லாம் நன்மையாக நடக்கும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஏதாவது முக்கியமான முடிவுகள் ஆக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை பெரியவர்களே ஆலோசித்து எடுக்கவும். தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். மூன்றாவது மனிதர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கக் கூடாது. அதிலும் புதிய உறவுகள் புதிய நட்புகள் என்று யாராவது உங்களுக்கு கிடைத்தால் அவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களை அவர்கள் ஏமாற்றி செல்லவும் வாய்ப்புகள் உண்டு. திருமண பேச்சு வார்த்தைகளை அடுத்த வாரம் தள்ளிப் போடவும். தினம் தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை எழுதினால் நன்மை நடக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் முன்கோபடாதீங்க. கவனக்குறைவாக வேலையை செய்யாதீங்க. வேலை செய்வதற்கு மனதில் ஈடுபாடு இல்லை என்றால் அந்த வேலையை செய்யாமல் இருப்பதே நல்லது. தவறாக ஒரு வேலையை செய்யும் போது அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவு வரும். வாக்குவாதம் வரும். சில நாட்கள் பிரிந்து இருப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் முன்னேற்றம் அடைய கூடிய வாரம் இது. முதலீட்டை அதிகப்படுத்தலாம். தொழிலை விரிவு படுத்தலாம். இந்த வரம் தினமும் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யவும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அது தடைப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். இடமாற்றம், பதவி உயர்வு, எது கிடைத்தாலும் இப்போதைக்கு அதை வாங்காதீங்க. செய்யும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும். பண பரிவர்த்தனையின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம் இந்த வாரம் 21, 22 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நல்லா ஓடிட்டு இருந்த வண்டி கூட நின்று செலவு வைக்கும் என்றால் பாருங்கள். குழந்தைகள் படிப்பு செலவு வேற இந்த மாத இறுதியில் வந்து விடும். சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. திருப்பிக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். தொழிலில் கணக்கு வழக்குகளை அடுத்தவர்களின் நம்பி ஒப்படைக்க வேண்டாம். என்ன தான் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் முதலீடு செய்தவர் கவனமாக இருந்தால் தான், அக்கறையாக இருந்தால்தான் தொழில் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் 23 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிக்கும். விவசாயிகளுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வந்த லாபத்தை பிரயோஜனமாக செலவு செய்வீர்கள். குடும்பத்தோடு கோயில் குளங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்ப்பாலின நட்பு கூடவே கூடாது. ரியல் எஸ்டேட் பிசினஸ் கமிஷன் தொழில் நல்ல வருமானத்தை கொடுக்கும்‌ கட்டுமான தொழில் நல்ல வருமானத்தை கொடுக்கும். 24, 25 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நன்மை ஒன்று நடக்கும். அதை எந்த ரூபத்தில் யாவது நடக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு உங்களுக்கு அமோகமான வரவேற்பு தான். உங்களுடைய முகமும், சிரிப்பும் வசீகரத் தோற்றமும் அடுத்தவர்களை கரகரக்கூடிய வகையில் அமையும். பெயர் புகழ் பாராட்டு எல்லாம் உங்கள் பின்னால் வரப் போகின்றது. சந்தோஷம் நிறைவான இந்த தருணத்தில் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீண் செலவுகள் அதிகரிக்கும். வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் கையில் செலவுக்கும் வழியில்லாமல் லேசான திண்டாட்டம் இருக்கத்தான் செய்யும். செலவுகளை குறைக்கவில்லை என்றால் பண பிரச்சனையை யாராலும் தடுக்க முடியாது‌. கொஞ்சம் நின்னு நிதானமாக யோசித்து எல்லா விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும். கூட மருத்துவ செலவு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. முன்கோபடாமல் பொறுமையாக இருங்கள். அடுத்தவர்கள் சொல்வதை சிறிதேனும் காது கொடுத்து கேட்க வேண்டும். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி. ஆகவே எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று முடிவுகளை எடுக்காதீங்க. தினமும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் சின்ன சின்ன தடங்கல்கள் வந்து போகும். பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. விவசாயிகளுக்கு அமோகமான வரவேற்பை கொடுக்கக் கூடிய வாரம் இந்த வாரம். ஆரம்பிக்கும் போது எல்லா விஷயங்களும் சிக்கலாக இருப்பது போலவே இருக்கும். ஆனால் முடிவு உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும். எதையும் நினைத்து கவலைப்படாதீங்க. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். பணப்பரிவர்த்தனையில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்தால் போதும். உங்களுடைய பொருட்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சிறிய பேனாவாக இருந்தாலும் பெரிய அளவில் காசு நகையாக இருந்தாலும் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

    Leave A Comment