• Login / Register
 • ராசி பலன்கள்

  12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள் (01/05/2023 - 07/05/2023)

  01/05/2023 முதல் 07/05/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் சுப செலவு ஏற்படும். வெளியூர் பயணங்களுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வார இறுதியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். வீண் விரைய செலவுகள் ஆகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் சோர்வு ஏற்படும். உடல் உபாதைகள் ஏற்படும். மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோற்பத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்மன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனை கொடுத்திருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். எதிரிகளை உங்கள் வசபடுத்தி விடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தெரியாத வேலையில் கால் வைக்காதீங்க. முன்பின் தெரியாத நபர்களை நம்பி அவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்து எதுவுமே செய்யக்கூடாது. மற்றபடி கலைஞர்களுக்கு இந்த வாரம் அமோகமான வரவேற்பு இருக்கும். தினம்தோறும் முருகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கூடுதல் வேலை இருக்கும். கூடுதல் அலைசல் ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். மூன்றாவது நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் எந்த சாவகாசமும் வைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதில் சில சிக்கல்கள் உண்டாகும். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் கை தூக்கி விடும். தினம்தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.

  கடகம்:

  கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் வேலைகளை கையில் எடுக்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பணக்கஷ்டம் படிப்படியாக குறையும். கடன் சுமை படிப்படியாக குறையும். சேமிப்பு படிப்படியாக இனி அதிகரிக்க தொடங்கிவிடும். கஷ்டம் என்று வரும்போது உங்களுக்கு ஆதரவாக நான்கு பேர் இருப்பார்கள். கவலை கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மையை தரும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சியான வாரமாக இருக்க போகின்றது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். சுப செலவு ஏற்படும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை சந்திப்பீர்கள். மன மகிழ்ச்சி அடைவீர்கள். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சொந்த தொழிலில் யார் பேச்சை கேட்டு முடிவு எடுக்காதீங்க. உங்க மனதுக்கு சரி என்று பட்டத்தை செய்யுங்கள். பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை வெளிப்படக்கூடிய வாரமாக இருக்க போகின்றது. உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. எல்லா வேலைகளிலும் உற்சாகமாக செயல்பட போகிறீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடிப்பீர்கள். கட்டுமான தொழில் அமோக லாபத்தை கொடுக்கும். கூடுமானவரை யாருக்கும் பஞ்சாயத்து செய்ய போகாதீங்க. இரண்டு நபர்களுக்குள் பிரச்சனை என்றால் நீங்கள் அதில் மூக்கை நுழைத்தால், உங்கள் மூக்கு உடைந்து விடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் நவகிரகத்தில் சனிபகவான் வழிபாடு நன்மையை தரும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. எந்த காரியத்தை தொட்டாலும் அவசரமாக முடிவு எடுக்கக் கூடாது. முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. வீட்டிற்கு தேவையான ஆபரண பொருட்களை வாங்கி சேர்க்கலாம். சொத்து சுகம் வாங்குவதற்கு இந்த வாரம் ஏற்ற வாரமாக இருக்கின்றது. சொந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தாய் வழி சொந்தம் உங்களுக்கு உதவியாக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். தினமும் பிள்ளையார் வழிபாடு நன்மையை தரும்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான சிரமங்கள் இருக்கும். சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சின்ன தோல்வி வந்தாலும் அதை கண்டு மனம் துவண்டு போகும். பெரியதாக எதையோ இழந்து விட்டது போல கவலைப்படுவீர்கள். எதுவுமே கிடையாதுங்க. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது. நிதானமாக சிந்தித்து நிதானமான முடிவுகளை எடுங்கள். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது தடைகளை தகர்க்கும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும். போட்டி பந்தயங்களில் நீங்கள் தான் முதல் இடத்தில் இருப்பீர்கள். சவால் விட்டு ஜெயித்துக் காட்டுவீர்கள். தலை நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிகமாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத ஒரு நட்பால் உங்களுடைய வாழ்க்கை மேல் நோக்கி செல்லும் வாய்ப்புகள் கதவை தட்டினால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனம் படாமல் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போகக் கூடிய இந்த நல்ல நேரம் வாய்ப்புகளை, தவற விட்டவர்கள் துரதிஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். கையில் பணம் தங்குவது கொஞ்சம் பிரச்சனை இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். இந்த வார இறுதியில் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் சின்ன கெட்ட பெயர் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. எப்போது மனதில் ஸ்ரீராம ஜெயம் சொல்லுங்கள்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை தொட்டாலும் அது இழுபரியாக இருக்கும். தொட்ட உடனே ஒரு காரியத்தில் வெற்றி இருக்காது. அவ்வளவு தான். மற்றபடி உங்களுடைய சொந்த தொழில், வேலை எல்லாம் சுமூகமாக நடக்கும். அன்றன்றே காண வேலையை அன்றைக்கு முடித்து விடுங்கள். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம் படாதீர்கள். வார இறுதியில் பிறகு ரொம்பவும் கஷ்டமாகிவிடும். எதிரிகளை அடித்து நொறுக்குவீர்கள். எல்லா வேலையிலும் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். இந்த வாரம் 2, 3 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை. தினமும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டும். எதிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. இத்தனை நாள் படாத பாடு பட்டு வாழ்க்கையில் படிக்கட்டுகளை ஏறி வந்திருப்பீர்கள். அதே துணிச்சலை கைவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்லது நடக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வாரம் 4ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். ஜாக்கிரதை தினமும் முருகப்பெருமான் வழிபாடு நன்மையை தரும்.

  Leave A Comment