• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய ராசிபலன் – 18 ஏப்ரல் 2023

    செவ்வாய்கிழமை

    18 - 04 – 2023

    சோபகிருது ஆண்டு - சித்திரை 05 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும், உடல்,நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். எதிலும் துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும்.

    மிதுனம்:

    மிதுன ராசியினர் இன்றைய தினம் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை சிறிது தள்ளிப் போடுவது நல்லது. பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

    கடகம்:

    கடக ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறர் விடயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். நெருங்கிய உறவுகளால் நிம்மதி இல்லா நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டி நிலவும். சிலருக்கு உடல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும்.

    கன்னி:

    கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் வழியில் தன லாபம் இருக்கும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் சிறிதும் தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக முடியும்.

    துலாம்:

    துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் சிறிது தாமதங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் சிலருக்கு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்படும்.

    விருச்சிகம்:

    விருச்சக ராசியினர் இன்றைய தினம் பிறருக்கு உதவி செய்வதில் எச்சரிக்கை தேவை. உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு சிலர் ஆளாகலாம். அரசாங்க ரீதியான காரியங்களில் இழப்பறி நிலை ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு மனசோர்வு ஏற்படும்.

    தனுசு:

    தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

    மகரம்:

    மகர ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தினரின் செயலால் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாவார்கள். புதிய முதலீடுகள் தொடர்பான முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது.

    கும்பம்:

    கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். சிலருக்கு முடிவெடுப்பதில் குழப்பமான நிலை இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் புனிதத் தலங்களுக்கு சென்று வருவார்கள்.

    மீனம்:

    மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் இனம் புரியாத கவலை ஏற்படும். அந்நிய நபர்களால் வருமானம் கிடைக்கும். தம்பதிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.

    Leave A Comment