• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 10 ஜூலை 2024!

    புதன்கிழமை

    10 – 07 - 2024

    குரோதி ஆண்டு – ஆனி – 26 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகளும் தடைகளும் வரலாம். கடனுக்கு வியாபாரம் செய்யாதீர்கள். முன்பின் தெரியாத நபரை நம்பி வியாபாரம் செய்யாதீர்கள். கொஞ்சம் வியாபாரத்தில் உஷாராக இருக்கவும். உறவுகளோடு வாக்குவாதம் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களை மதிக்காதவர்கள் கூட மதிக்க தொடங்கி விடுவார்கள். திறமைகள் வெளிப்படக்கூடிய நாள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நம்மை விடப் பெரியவர் சிறியவர் மேல் அதிகாரி என்ற பாகுபாடு பார்க்கவே மாட்டீங்க. உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய முதலீட்டுக்கு உண்டான கடன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று இரண்டுக்கு நாலு வேளை தலை மேல் வந்து நிற்கும். கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். இருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் உங்களால் எல்லா வேலையையும் சரியாக முடிக்க முடியும். என்னால் முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். விடா முயற்சி நிச்சயம் உங்களுக்கு விஸ்வரூப வெற்றி தரும். கடவுளின் மீது பாரத்தை போட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்கள் எதிலும் அவசரப்படக்கூடாது. இன்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். வேலையில் நிதானம் தேவை. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளவே பார்க்க வேண்டும். தொழிலில் முன்பின் தெரியாத நபரை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. யாராவது அனுபவசாலிகளை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடங்க.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன கோபங்கள் வரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும். இதனால் நிம்மதியை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் டென்ஷன் இருக்கும். தொழிலிலும் நிம்மதி இருக்காது. இப்படி பல குழப்பங்களை மனதில் போட்டுக்கொண்டு புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மனதை அமைதிப்படுத்த ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்கள் இன்று முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கும். சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை சரியாக முடித்துக் கொடுப்பீர்கள். பாராட்டையும் பெறுவீர்கள். சில பேருக்கு சின்ன சின்ன உடல் உபாதைகள் இருக்கும். அதை சரி செய்ய மருத்துவரை அணுகவும். தாய் வழி சொந்தத்தின் மூலம் நல்லது நடக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்த வேலைக்கு பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வரும். குடும்பத்தில் மனைவியின் சப்போர்ட் முழுமையாக கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வரவு அதிகரிக்கும் நிதிநிலைமை சீராகும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். இதனால் மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மேலதிகாரிகளோடு சின்ன சின்ன வாக்குவாதம் வரலாம். அனுசரித்து செல்லவும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிருப்தி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் மனநிறைவு இருக்காது. வேலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் கிடைக்காது. தொழிலில் நீங்கள் நினைத்தபடி எந்த வேலையும் நடக்காததால் கொஞ்சம் டென்ஷன் ஏற்படும். கூடுதல் முயற்சியை எடுங்கள். எல்லாவற்றிற்கும் நல்ல காலம் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்யும். எதையும் அவசரப்பட்டு செய்யாதீங்க. முன்பின் தெரியாத வேலையில் கால் வைக்க வேண்டாம்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை சீராகும். வேலை செய்யும் இடத்தில் புது புது பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேல் அதிகாரிகளையோ அல்லது தெரிந்தவர்களையோ பகைத்துக் கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் நட்புறவோடு பழகுங்கள். பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மன நிம்மதி கிடைக்கும். இல்லையென்றால் மன நிம்மதி கெட்டுப் போகும் ஜாக்கிரதை.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொந்தரவு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை என்று சில பல சிக்கல்களை சந்திப்பீர்கள். மேலதிகாரிகளின் பிரஷர் இருக்கும். இன்று நிம்மதியான தூக்கம் கிடைப்பது கூட சந்தேகம் தான். இதையெல்லாம் தாண்டி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு உங்கள் வேலையை செய்ய வேண்டும்.

    Leave A Comment