• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 09 ஜூலை 2024!

    செவ்வாய்கிழமை

    09 - 07 – 2024

    குரோதி ஆண்டு – ஆனி - 25 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வீட்டில் சுகபோகமான உபசரணை இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல வருமானத்தை பெறுவீர்கள். உங்களுடைய பெயர் புகழ் ஊர் எங்கும் பரவும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நீண்ட நாள் கிடப்பில் போட்டு வைத்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். உங்களால் இயன்ற உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். சந்தோஷம் நிறைந்த இந்த நல்ல நாளில் குடும்பத்தில் நல்ல காரிய பேச்சுக்கள் தொடங்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் சின்ன சின்ன சிரமங்கள் வரலாம். அதையெல்லாம் சமாளிக்கக்கூடிய தெம்பு உங்களிடம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடவுளின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் அடம்பிடித்து செய்யாதீங்க. பெரியவர்களின் பேச்சை கேட்டு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையை தொடங்கினாலும் தடங்கல்கள் உண்டாகலாம். கூடுமானவரை புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசியம் செய்ய வேண்டிய வேலைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிரமம் இருந்தாலும் இன்றைக்கான வேலையை இன்றே முடித்து விடுங்கள். நாளை என்ற வார்த்தையை மறந்து விடுங்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்கள் உதவி என்று கேட்கவில்லை என்றாலும், தேடிப்போய் உதவி செய்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலில் புதிய யுத்திகளை அறிமுகம் செய்வீர்கள். புதிய முதலீட்டை செய்வீர்கள். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். உடன் வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்லவும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் இருக்கலாம். இருந்தாலும் முன்கோபடக்கூடாது. சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பதில் மட்டும்தான் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான மனநிலை இருக்கும். எந்த வேலையை செய்யணும், எதற்கு செய்யணும் என்பதில் ரொம்ப ரொம்ப தெளிவாக இருப்பீர்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் அதை கண்டுபிடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வரலாம் வாக்குவாதம் கூடாது பாத்துக்கோங்க.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு உயர் பதவிகள் தானாக தேடி வரும். நிதி நிலைமையில் சிக்கி இருப்பீர்கள். ஆனால் உதவி கடவுளின் ரூபத்தில் கிடைக்கும். பயப்படாதீங்க, தைரியத்தோடு பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. இறைவனின் ஆசிர்வாதம் உங்கள் பக்கம் இருக்கிறது.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்கள் கல்வியில் திறமையாக செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களுடைய பொறுப்புகளை முழுசாக அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் உறவுகளோடு அனுசரித்து செல்ல வேண்டும். பொறுமை காக்கவும். உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி இன்று பெரிய பிரச்சனைகள் இருக்காது. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். பிடித்தவர்களை பிரிந்து செல்லக்கூடிய சூழல் சில பேருக்கு உண்டாகும். வாழ்க்கை என்றால் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்க பழகிக்கொள்ளுங்கள். மனசு உடைந்து போகக் கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகிவிடும். சில பேருக்கு வேலையில் இடம் மாற்றம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பண பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். எதிர்பாராத பண வரவு உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும். வேலை தொழில் எதிலும் இன்று பெருசாக பிரச்சனை இருக்காது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    Leave A Comment