• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய நாள் எப்படி? 07 ஜூலை 2024!

  ஞாயிற்றுக்கிழமை

  07 - 07 - 2024

  குரோதி ஆண்டு – ஆனி –  23 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பெருமையோடு உங்களுடைய வரலாற்றை பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷத்தோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வெளியூரில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

  ரிஷபம்:

  ரிஷப ராசி காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய தடை விளக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் நினைத்தபடி திருமணத்தை நிச்சயிருப்பீர்கள். சுப செலவுகள் ஏற்பட கூடிய காலமும் நேரமும் நெருங்கி விட்டது. வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். தொழிலில் முதலீட்டில் கவனமாக இருக்கவும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். சோம்பேறித்தன பட மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். தொழிலில் முதலீடு செய்வதற்கு தேவையான பணம் கிடைக்கும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்கள் எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு வெற்றிகரமானதாகவும் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். பிள்ளைகளுடைய போக்கில் கவனம் செலுத்துங்கள். அவர்களை அடித்து திருத்தாமல், அன்பால் திருத்த பார்ப்பது நல்லது. நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்கள் இன்று அமைதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கணவன் மனைவி பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்‌. பிரிந்த உறவுகள் கூட ஒன்று சேரும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு பெயர் புகழ் இன்று தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து வாழ்வீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி நன்மையை செய்யும். தொழிலில் கணக்கு வழக்குகளை கவனத்தோடு சரி பார்க்கவும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் மீது அக்கறையோடு இருப்பீர்கள். அதாவது தான் மட்டும் நன்றாக இருந்தால் பத்தாது‌ தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இதனாலேயே உங்களுக்கு பாதி பிரச்சனை சரியாகிவிடும். மனம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அல்லவா. உங்களுடைய நல்ல மனது உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் எல்லா வேலையையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைப்பீர்கள். ஆனால் விடுமுறை நாளை சரியாக பயன்படுத்தும் போது தான் வார நாட்களில் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து இந்த விடுமுறை நாளையும் உபயோகமாக பயன்படுத்த பாருங்கள்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்காது. தலைவலியோடு தான் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்‌. விடுமுறை நாளிலும் இந்த தொந்தரவா என்று கொஞ்சம் டென்ஷன் ஆகும். வேறு வழி கிடையாது இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கப் போகிறீர்கள். சாந்தம் தான் இன்று உங்களுக்கு ஆயுதமாக இருக்கும். எதிரிகள் வந்து தொல்லை கொடுப்பார்கள். உறவுகளால் பிரச்சனைகள் வரும். இருந்தாலும் பொறுமையாக எதிர்த்து நின்று போராடுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கப் போகிறது. அனுபவத்தை வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொண்டால் நல்லது நடக்கும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். எந்த இடத்திலும் அதிகம் பேசாதீர்கள். உங்களுக்கு நடக்கும் நல்லதை நாலு பேரிடம் தம்பட்டம் அடுத்தால், பிரச்சனை உங்களுக்கு தான் வரும். அதிகமாக கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் கவனமாக இருங்கள். பெரியவர்கள் சொல்வதை பொறுமையாக கேளுங்கள்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு அதிகரிக்கும். குடும்பத்தை கவனத்தோடு பார்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் டென்ஷன் கூடுதலாக இருக்கும்‌. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு வேலையில் அக்கறை காட்டினால் எல்லாம் சரியாகிவிடும். கூடுமானவரை யாரிடமும் பொய் சொல்லி பழகாதீங்க. உண்மையை சொல்லி திட்டு வாங்கினாலும் தவறு கிடையாது. பொய் சொல்லி பிரச்சனையிலிருந்து தப்பிக்க கூடாது ஜாக்கிரதை.

  Leave A Comment