இந்த மாதம் எப்படி இருக்கு? ஆனி மாத ராசிபலன்கள் (தனுசு - மீனம் வரை)!
பிறந்துள்ள ஆனி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆனி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை பெறும் மாதமாக திகழப் போகிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
தொழிலைப் பொருத்தவரை நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். முடிந்த அளவிற்கு பணத்தை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் கையாள வேண்டும். தேவைக்கேற்ற பண வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அதனால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக திகழப் போகிறது. நீண்ட நாட்களாக பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படி படியாக குறையும். பணப்பரிவர்த்தனை அதிக அளவில் ஏற்படும். இருப்பினும் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.
வேலை தொடர்பாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதிக அளவில் கவனம் செலுத்தினால் நல்ல பலனை பெற முடியும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பொறுமையுடன் பேசுவது நன்மையை ஏற்படுத்தும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். வேலையில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழிலில் அதிக அளவு லாபம் ஏற்படும். பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு அதிகமாகும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். யார் பெரியவர் என்று போட்டி போடாமல் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். இல்லையேல் மன கவலைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சஞ்சலம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படாது. இருப்பினும் பிறரிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலையில் அதிக அளவு வேலை சுமை இருக்கும். முயன்ற அளவிற்கு வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
தொழிலை பொருத்த வரை லாபகரமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கடினமான போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இருப்பினும் மன அழுத்தம் காரணமாக யாரிடமும் தேவையற்ற பேச்சுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.
Leave A Comment