• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? ஜூன் 17 - 23 வரை; துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    17/06/2024 முதல் 23/06/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள். மனவருத்தம் நீங்கும் வாரமாக இந்த வாரம் திகழும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக செய்து முடித்து நற்பெயரை வாங்குவீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மூன்றாவது நபரால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். அதேசமயம் வாரா கடன் வசூலாகும் சூழ்நிலையும் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் அதை கூடுதல் கவனத்துடன் செய்து முடிப்பது மிகவும் முக்கியம். சிறு தவறுகளும் பெரிய பிரச்சினையில் கொண்டு சென்று விடும் என்பதால் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கூடுதல் பொறுப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, உடல் ரீதியாக சோர்வு உண்டாகும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடன் இருப்பவர்களின் உதவியால் சிறப்பாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. அதனால் கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கும் புதிய தொழிலில் ஈடுபடுவதற்கும் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும்.

    வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகல்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்த வரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும் கடன் வாங்காமல் தவிப்பது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment