இந்த மாதம் எப்படி இருக்கு? ஆனி மாத ராசிபலன்கள் (சிம்மம் - விருச்சிம் வரை)!
பிறந்துள்ள ஆனி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், சிம்மம் - விருச்சிம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆனி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப் போகிறது. இந்த மாதத்தில் பலவிதத்தில் நன்மைகளை பெறுவீர்கள். உறுதியான மனநிலை உண்டாகும். தொழிலிலும் வியாபாரத்திலும் உங்களுடைய உழைப்பிற்கேற்ற லாபத்தை நீங்கள் அடைவீர்கள்.
வேலை தொடர்பான விஷயங்களில் உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதனால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபமும் சேமிப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நினைத்த வெற்றியை அடைவீர்கள்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்களை தரும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். எதிர்பாராத வகையில் பல ஆதாயமான விஷயங்கள் நடைபெறும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இருப்பினும் அதிக போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும்.
வேலையில் வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடித்து எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். இழந்த மதிப்பையும் மரியாதையையும் பெரும் மாதமாக இந்த மாதம் திகழும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜரை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும் மாதமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கௌரவம் அதிகரிக்கும் மாதமாக திகழப் போகிறது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் செல்வாக்கையும் பெறுவீர்கள். கடினமான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு சிலருக்கு வேலை ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி கடினமாக உழைக்க வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாக இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். முடிந்த அளவிற்கு திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்தால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
Leave A Comment