• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஆனி மாத ராசிபலன்கள் (மேஷம் - கடகம் வரை)!

    பிறந்துள்ள ஆனி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான முதல் நான்கு ராசியினருக்கும் ஆனி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கௌரவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியங்கள் விரைவிலேயே நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். செல்வ செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு சொத்து, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பணம் சம்பாதிப்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறதோ அதே அளவிற்கு செலவுகளும் அதிகரிக்கும். வீண் விரயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் தேடிவரும்.

    வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் நிதிநிலை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் நலனில் கவனம் தேவை.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாதமாக இந்த மாதம் திகழப்போகிறது. எந்த ஒரு முடிவையும் திறம்பட எடுப்பீர்கள். அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.

    தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் அதில் நல்ல பலனை பெற முடியும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வரவை மிஞ்சிய செலவு ஏற்படும் மாதமாக திகழப் போகிறது. ஒரு சிலருக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. போட்டிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உண்டாகும். அதனால் சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வருமானம் சிறப்பாக இருக்கும். என்னதான் வருமானம் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்பதால் வீண் விரயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருக்கும் உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து முடிந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து செல்வது மனஸ்தாபத்தை குறைக்கும். உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் எதிர்பார்த்த அளவிற்கு மாற்றங்கள் ஏற்படாது. மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சனி பகவானை வழிபட வேண்டும்.

    Leave A Comment