இந்த வாரம் எப்படி..? ஜூன் 10 - 16 வரை; துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!
10/06/2024 முதல் 16/06/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் பொறுமையை கையாள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. எடுத்த காரியத் வெற்றிகரமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
வேலையை பொருத்தவரை உற்சாகமாகவே செயல்படுவீர்கள். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதனால் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உழைப்பிற்கு ஏற்ற பலனே கிடைக்கும். தொழில் ரீதியாக எந்தவித முடிவையும் இந்த வாரம் எடுக்காமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு காந்திமதி அம்மனை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். திருமண முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உடனுக்குடனே சரியாகிவிடும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் பொறுமையும் தன்னம்பிக்கையோடும் இருந்து அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். அதனால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குழந்தைகளின் திருமண விஷயங்கள் சாதகமாக முடியும். வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த கடனை திரும்பப் பெரும் வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உங்களுடைய கடின உழைப்புக்கேற்ற பலனை இந்த வாரத்தில் நீங்கள் பெறுவீர்கள். விரும்பிய சலுகைகள் உங்களை தேடி வரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்குரிய புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இதுவரை இருந்து வந்த அதிகப்படியான செலவுகள் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். திருமண விஷயங்களில் இந்த வாரம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதனால் உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் பேசும் பொழுது சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. மனவருத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையைத் தரும். குடும்ப பிரச்சினைகளை வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை சிறப்புடன் செய்து முடிப்பதன் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருக்க வேண்டும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
Leave A Comment