இந்த வாரம் எப்படி..? ஜூன் 10 - 16 வரை; மேஷம் - கன்னி ராசிகளுக்கான பலன்கள்!
10/06/2024 முதல் 16/06/2024 வரையான இந்த வாரத்திற்கான மேஷம் - கன்னி ராசிகளுக்கான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மருத்துவ செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும்.
வேலையை திறமையாகச் செய்து முடித்தாலும் எதிர்பார்த்த சலுகைகளை இந்த வாரத்தில் பெற முடியாது. உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். இருப்பினும் தொழில் ரீதியாக யாருக்கும் பணத்தை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை ஓரளவிற்கு சாதகமாகவே இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவார்கள். எதிர்பாத்த வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினரிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருந்தாலும் உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடித்து உங்கள் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. நஷ்டமும் ஏற்படாது. முடிந்த அளவிற்கு தொழில் ரீதியாக யாரிடமும் இருந்து கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் கைகூடும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதற்கு உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடன் தொழிலை கவனத்துடன் செய்வதன் மூலம் பிற்காலத்தில் லாபகரமான தொழிலை அமைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று பதட்டமான வாரமாகவே திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலனில் பாதிப்புகள் ஏற்படும். உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பெரிதாக பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. பொறுமையை கையாளுவது சிறப்பு.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சலுகைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. அதனால் மனக்குழப்பத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நிறைவேறும் வரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். திருமணம் முயற்சிகள் கைகூடும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது என்றாலும் வேலை செய்யும் பொழுது சற்று கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இருப்பினும் கடின உழைப்பு கண்டிப்பான முறையில் தேவைப்படும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் நல்ல சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சிறிய தவறு கூட பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். அதனால் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும். உடல் நலனில் கவனம் தேவை. பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் கண்ணும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். இந்த வாரத்தில் தொழிலை விரிவு படுத்தவோ அல்லது புதிதாக தொழிலில் முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
Leave A Comment