• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஜூன் மாத ராசிபலன்கள் (தனுசு - மீனம் வரை)!

    பிறந்துள்ள ஜூன் மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் ஜூன் மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவால்களை சந்திக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் விரைவில் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக எந்தவித முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாகதேவர்களை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படக்கூடும். அதனால் கடன் சுமை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வருமானத்தை அதிகரிப்பதில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். கடின உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏமாற்றங்களை சந்திக்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வரவை விட செலவுகள் குறைவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வீண் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜ பெருமாளை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் வெற்றியடையும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் சூழ்நிலை உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை திறம்பட பொறுமையுடன் செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக தீர ஆலோசித்து எடுப்பது நல்லது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அர்த்தநாரீஸ்வரரை வழிபட வேண்டும்.

    Leave A Comment