• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஜூன் மாத ராசிபலன்கள் (சிம்மம் - விருச்சிகம் வரை)!

    பிறந்துள்ள ஜூன் மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், சிம்மம் - விருச்சிகம் வரையான நான்கு ராசியினருக்கும் ஜூன் மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காரிய வெற்றி ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்சினைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். மேலும் யாரையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையாக செய்து முடித்து விரும்பிய இடம் மாற்றத்தை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் கவனத்துடன் எடுக்க வேண்டும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ராமபிரானை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புத்தி கூர்மையுடன் செயலாற்றும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். கோவத்தை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்காக கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வேண்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமைதியுடன் செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உடல் நலனில் அலட்சியமாக இல்லாமல் சிறிய உபாதையாக இருந்தாலும் உடனே உரிய  மருத்துவரை அணுக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் வேலையில் நல்ல மாற்றத்தை உணர முடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் சற்று காலதாமதமாக கிடைக்கும். கவனக்குறைவால் தொழிலில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஏற்ற இறக்கம் தென்படும்.  மருத்துவர் ரீதியாக செலவுகள் உண்டாகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினரிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். சிறு தவறுகளால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். இருப்பினும் உடன் இருப்பவர்களை முழுமையாக நம்பாமல் தானே முடிவை எடுப்பது நன்மையை தரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    Leave A Comment