இந்த மாதம் எப்படி இருக்கு? ஜூன் மாத ராசிபலன்கள் (மேஷம் - கடகம் வரை)!
பிறந்துள்ள ஜூன் மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான முதல் நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் மாதமாக திகழப்போகிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் சிறிது சிரமங்கள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை பிறக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய வழிகளை மேற்கொள்வீர்கள்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் வீண் விரயங்களை தவிர்ப்பது நன்மையை தரும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
வேலையைப் பொருத்தவரை மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் கவனம் தேவை. வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவாலான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாக இருக்கும். இருப்பினும் அந்த வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலமே உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டையும் சலுகைகளையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எனினும் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் தடைகள் உண்டாக்கும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விவேகத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப காரிய பேச்சுகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையை சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளும் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.
Leave A Comment