• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? மே 27 - ஜூன் 02 வரை; துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    27/05/2024 முதல் 02/06/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சிரமமான வாரமாகவே திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. இருப்பினும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிதாக எந்த முயற்சியிலும் இந்த வாரம் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தங்கள் வேலையை செய்வதன் மூலம் சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடுமையான போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடன் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. யார் பேச்சையும் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு போதுமான அளவு ஏற்படும். செலவுகள் அதிகமானாலும் அதை சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். வீண் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பேசும்பொழுது கவனமாக பேச வேண்டும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு எதிர்கால திட்டத்தை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையின் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றிகள் கிடைக்கும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படுவதில் தாமதங்கள் ஏற்படும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியை தருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு வார இறுதியில் ஏற்படும். உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது நன்றாக ஆலோசித்து பிறகு எடுப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். செல்வாக்கு மிகுந்த நபர்களின் உதவியால் தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்துவது முக்கியம். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. இருப்பினும் செலவுகளை சமாளித்து கொள்ளலாம். தொழிலை முன்னேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்திலும், உடல் ரீதியாகவும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் அடைவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தனித்து வேலையை செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள். ஒரு சிலருக்கு இதனால் பதிவு உயர்வு கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நன்மையை தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment