இந்த வாரம் எப்படி..? மே 27 - ஜூன் 02 வரை; மேஷம் - கன்னி ராசிகளுக்கான பலன்கள்!
27/05/2024 முதல் 02/06/2024 வரையான இந்த வாரத்திற்கான மேஷம் - கன்னி ராசிகளுக்கான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்செய்திகள் வந்து சேரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்தபடி பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். பிரிந்து இருந்த உறவுகள் ஒன்று சேருவர்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை சிறப்பாக செய்ய முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கவலைகள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலனில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. சிறு கவனக்குறைவும் பெரிய பிரச்சினையை ஏற்படக்கூடும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருப்பினும் தங்கள் வேலையில் கவனத்துடன் செயல் பட்டால் பிரச்சினைகள் வராது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் உடன் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் மிகுந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களை மாற்றும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை மிகுந்த கவனத்துடன் வேலையை செய்ய வேண்டும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது, உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். இருப்பினும் உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருந்தாலும் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கனவுகளை நினைவாக்குவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிரமப்பட்டு தான் எதையும் சாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மறைமுக எதிரிகளும் ஏற்படுவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட அதிகமான அளவு செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும் சோர்வும் உண்டாகும். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். இல்லையேல் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
Leave A Comment