• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? வைகாசி மாத ராசிபலன்கள் - தொழில் தடைகள் நீங்கும் யோகம்!

    பிறந்துள்ள வைகாசி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். விரயங்கள் அதிக அளவில் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ண நோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பாத இடத்திற்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வேலையை விட்டு விடலாமா என்று எண்ணமும் ஏற்படும். எந்த முடிவையும் இந்த மாதம் எடுக்காமல் தள்ளி வைப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு அவர்களுடைய பழைய கடன்களை திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும். தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக நடைபெறும்.

    வேலையை பொருத்தவரை புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் ஏற்படும். புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் சிறந்த மாதம் திகழும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட இரண்டு மடங்கு செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. ஆரோக்கிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை அற்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விட்டு கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பப் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். என்னதான் கடினமாக வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். சென்ற மாதத்தில் இருந்த தொழில் தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வைத்தீஸ்வரரை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவர்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தவர்களும் தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானே வழிபட வேண்டும்.

    Leave A Comment