• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய நாள் எப்படி? 22 மே 2024!

  புதன்கிழமை

  22 – 05 - 2024

  குரோதி ஆண்டு – வைகாசி – 09 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையை நேரத்தோடு தொடங்கி விட வேண்டும். வேலைக்கு 1/2 மணி நேரம் முன்கூட்டியே கிளம்புங்கள். லேட் ஆக ஒரு வேலையை தொடங்குவதன் மூலம் இன்று சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தாமதத்தை இன்றைய நாள் நீங்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி குடும்பத்தில் நிறைவான சந்தோஷம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நல்லது நடக்கும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்க போகின்றது. சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். அதற்காக வேலையில் கவனம் இல்லாமல் இருக்கக்கூடாது. கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை கொஞ்சம் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டும். தொழிலில் இருக்கக்கூடிய சிக்கல்களை சரி செய்ய நேரத்தை ஒதுக்கங்கள். பிறகு பார்க்கலாம் என்று பிரச்சனைகளை ஒத்தி வைக்காதீங்க.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான சூழ்நிலை நிலவும். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக் கூடாது என்ற சிக்கல்கள் சில பேருக்கு வரும். இதனால் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் காட்டுங்கள். தலைவலி கால் வலி வந்தாலும் அதை அலட்சியப்படுத்தாதிங்க. நீண்ட தூர பயணத்தின் போதும் கவனம் இருக்கட்டும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். நல்ல ஓய்வு, நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு கிடைக்கும். பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கை இன்று ருசியாக ரசனையாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. என்ஜாய் பண்ணுங்க.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். முருகர் வழிபாடு உங்களுக்கு இன்று மன நிம்மதியை கொடுக்கும். தேவையற்ற சிந்தனைகளிலிருந்து வெளிவருவீர்கள். எதிரி தொல்லை நீங்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது. வேலை வியாபாரம் எல்லா விஷயத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்கள் இன்று பெரிய அளவில் எந்த வேலையையும் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு பெரிய அளவில் பண பரிமாற்றம் செய்வது, நிறைய பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது, இப்படி ரிஸ்க் எடுக்கக் கூடிய வேலையை செய்யாதீங்க. அன்றாட வேலையில் தேவையான வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவது நபர் சொல்வதைக் கேட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். செய்யக்கூடிய வேலையில் உங்களுக்கு ஒரு மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கு என்ன விஷயங்கள் எல்லாம் தேவையோ அதை பெற்றவர்கள் பார்த்து பார்த்து செய்வீர்கள். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேனேஜரிடம் பாராட்டை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த நட்போ அல்லது உறவோ ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யவும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நல்ல நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுகள் நடக்கும். முருகன் கோவிலுக்கு சென்று வருவது நன்மையை கொடுக்கும். வேலை வேலை என்று இல்லாமல் கொஞ்சம் குடும்பத்தையும் கவனியுங்கள். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். இன்று மாலை உங்களுக்கான நாள், குடும்பத்துக்கான நாளாக இருக்கும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தப்பு செய்து, திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. ஆர்வக்கோளாறில் எல்லா வேலையையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். பதறாத காரியம் சித்தராது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இன்றைய நாளை கடந்து சென்றால் தப்பிக்கலாம். அவசரப்பட்டால் பிரச்சனை உங்களுக்கு தான் பொறுமை பொறுமை பொறுமை.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உறவுகளைப் பற்றி சரியாக புரிந்து கொள்வீர்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகள் நீங்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்க மாட்டார்கள். இதனால் வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. என்னதான் நியாயம் நம் பக்கம் இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நாம் தான் கொஞ்சம் பணிவாக பேச வேண்டும். முன்கோபத்தை குறைத்து ஜாக்கிரதையாக வார்த்தைகளை போட்டு கவனமாக பேசுங்கள்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு பொறுமை தேவை. அடுத்தவர்களை மட்டும் தட்டி பேசக்கூடிய பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் எனக்குத்தான் தெரியும் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். நிறைகுடம் தலும்பாது அல்லவா. ஆகவே அமைதியாக இருக்கும் போது தான் உங்களுடைய திறமையும் வெளிப்படும். எந்த விஷயத்திலும் தம்பட்டம் அடிக்கக் கூடாது. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

  Leave A Comment