இன்றைய நாள் எப்படி? 13 மே 2024!
திங்கள்கிழமை
13 - 05 – 2024
குரோதி ஆண்டு – சித்திரை – 30 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையும் தோன்றாது. உங்களுடைய வேலையில் அதிக ஈடுபாடுடன் இருப்பீர்கள். இதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். லாபம் இரட்டிப்பாக பெருகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிக்கல் பிடுங்கள் கொண்ட பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. கொஞ்சம் கூடுதல் உழவிப்பை போடும்போது தான் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் ரொம்பவும் அலட்சியப் போக்கோடு இருப்பீர்கள். இதனால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பிறகு கவனத்தோடு வேலை செய்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் கைகூடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மூன்றாவது மனிதரை முழுசாக நம்ப வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எல்லாரும் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு திறமையோடு வேலை செய்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். அகல கால் வைக்காதீங்க.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் லாபத்தை கொடுக்கும். குடும்ப விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனைவியோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிடாதீர்கள். நிறைய தண்ணீர் குடிங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இளகிய மனசு இருக்கும். அடுத்தவர்கள் உதவி என்று கேட்டால், உங்களுக்காக இருக்கும் பொருட்களை கூட தூக்கிக் கொடுத்து விடுவீர்கள். ஆனால் அவ்வளவு ஏமாளியாக இருக்க வேண்டாம். தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்று இருப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ரொம்ப பாவம் பார்த்தா, தேவையில்லாமல் ஏமாந்து போயிருவீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு உங்கள் பின்னால் இருப்பவர் முந்திக்கொள்வார். ஜாக்கிரதை, நெருங்கிய நண்பர் தானே என்று கூட உங்கள் ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் முடித்து தராததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு சொன்ன நேரத்துக்கு முன்னவே வேலையை முடிச்சிடுங்க. அதுதான் நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் ஆசையும் அதிகமாக இருக்கும். எதிலும் சாதித்துக் காட்ட வேண்டும் என்று நினைப்பீர்கள். எல்லா விஷயத்திலும் கூடுதலாக அக்கரை காட்டுவீர்கள். இதனால் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் கவனமாக இருங்க. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டி பேசுவார்கள். அதிலேயே பாதி உங்களுடைய மனது பட்டாம்பூச்சி போல பறக்க தொடங்கிவிடும். எந்த கவலையும் இருக்காது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். இன்று நீங்க அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். சொந்த தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் விலக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். நினைத்த விஷயத்தை சாதித்த மனதிருப்தி இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் இன்னும் கொஞ்சம் உழைப்பை முதலீடாக போட்டால் கூட தவறு கிடையாது. சோம்பேறித்தனம் படக்கூடாது. மேலதிகாரிகளிடம் பொய் சொல்லக்கூடாது. குறிப்பாக அதிக எண்ணெய் பண்டங்களை சாப்பிடவே கூடாது.
Leave A Comment