• Login / Register
  • செய்திகள்

    கோடைவிடுமுறை நிறைவு : பள்ளிகள் மீண்டும் திறப்பு

    கடந்த கல்வியாண்டில் ஒன்று முதல் 9 வரை படித்த மாணவ மாணவிகளுக்கு கடந்த மே மாதம் 13ம்தேதி கோடை விடுமுறை விடப்பட்டது. 


    இந்தநிலையில் 31 நாட்கள் விடுமுறைக்குப்பின் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும், ஒன்று முதல் 9 வரையிலான மாணவ மாணவிகளுக்கும் இன்று 13ஆம்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. நடப்பு 2022-323 ஆம் கல்வியாண்டுக்கான பாடங்கள் இன்றுமுதல் நடத்தப்பட உள்ளன.

     

    ஒரு மாதத்துக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஆட்சியர்களின் உத்தரவின்டி பள்ளி வளாகங்கள், மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி, கழிவறை போன்றவை சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. வகுப்பறைகளில் உள்ள இருக்கைகள், மின்விளக்கு, சுவிட்ச் போன்றவையும் சரிபார்க்கப்பட்டு உள்ளன.

     

    பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்படுவதால் சரியான நேரத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம், சீருடை வழங்கவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

     

    11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம்தேதியில் இருந்து வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. கடந்த 2 கல்வியாண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் முதன்முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment