• Login / Register
  • செய்திகள்

    ரயில்வே தேர்வு- சிறப்பு ரயில்கள் இயக்கம்

    மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்கள், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

    இதனிடையே, ரயில்வே பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு நடைபெற்றது.

    இதனையடுத்து, இரண்டாம் கட்ட தேர்வு நாளை ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த தேர்விற்காக, வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

    இது குறித்து ரயில்வே வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2ஆம் கட்ட தேர்விற்கு தென்மாவட்டத்தில் இருந்து ஆர்.ஆர்.பி. எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி, திருநெல்வேலி முதல் பெங்களூர் செல்லும் ரயிலானது வருகிற 13ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும்.

    பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி வரும் ரயில் இடையே வருகின்ற 17 ஆம் தேதி பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கு இயக்கப்படும்.

    தூத்துக்குடி முதல் கர்னூல் செல்லும் ரயிலானது, வருகின்ற 13ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படவுள்ளது.

    அதே வேளையில், கர்னூல் முதல் தூத்துக்குடி இடையே வருகின்ற 17ஆம் தேதி கர்னூலில் இருந்து இரவு 7.30 மணிக்கு கிளம்புகிறது.

    கொல்லம் முதல் திருச்சி செல்லும் ரயிலானது வருகிற 13ஆம் தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படுகிறது.

    மாற்று பாதையில் திருச்சி முதல் கொல்லம் இடையே வருகின்ற 17 ஆம் தேதி திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு ஆர்.ஆர்.பி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    Leave A Comment