எதற்கும் தயார்; துணை முதலமைச்சராக உதயநிதி - மு.க.ஸ்டாலின் பதில்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்திக்கும்போது,
மேலும் உதயநிதி துணை முதலமைச்சராவாரா என்பது குறித்தான கேள்வி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா? என்ற கேள்வி முதலமைச்சரிடம் வைக்கப்பட்டது.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என தெரிவித்தார்.
ஏற்கனவே முதலமைச்சருக்கு அனைவரும் துணையாகவே உள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ”எப்பேர்பட்ட மழையையும் சந்திப்பதற்கு தமிழ்நாடு அரசு தயராக உள்ளது. தண்ணீர் தற்போது தேங்கியுள்ளதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன. எங்கே தேங்கியுள்ளதென்று காட்டச்சொல்லுங்கள்” என தெரிவித்தார்.
Leave A Comment