• Login / Register
  • செய்திகள்

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா

    தமிழக சட்டமன்றத்தில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

     

    அதில், தமிழக முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 அரசு விழாவாக கொண்டாடப்படும்  என அவர் அறிவித்தார்.

     

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

     

    Leave A Comment