நமக்காக நாம்' இன்று வவுனியாவில் ஆரம்பம் - நாளை மாபெரும் பொதுக்கூட்டம்!
பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் வவுனியா மாவட்டத்தில் இன்று (07) சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட உள்ளது.
சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (07) முதல் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 'நமக்காக நாம்' பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நாளை (08) ஞாயிற்றுக்கிழமை சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடாத்தப்பட உள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் மன்னார் வீதி, குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நாளை மாலை 03.00 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாக உள்ளது.
தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சித்தலைவர்ள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக உரையாற்ற உள்ளனர். இறுதியாக பா.அரியநேத்திரன் சிறப்புரை இடம்பெற உள்ளது.
Leave A Comment