• Login / Register
  • செய்திகள்

    ‘இனி இருண்ட காலம்’ – டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் கவலை

    டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர் எலான் மஸ்க் கடந்த 14ஆம் தேதி டிவிட்டரின் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 44 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவிகித பங்குகளை ஏற்கனவே வைத்துள்ள நிலையில், டிவிட்டரின் இயக்குநர் குழுவில் இடம் பெற மாட்டேன் என்ற அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இந்த நிலையில், தற்போது ‘இணையதள உலகின் மாபெரும் சமூக ஊடக தளமான’ டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

    டிவிட்டர் நிறுவனத்தின் குழு அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில், அதன் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்தார்.

    டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து, பப்ளிக் நிறுவனமான டிவிட்டர் இனிமேல் பிரைவேட் நிறுவனமாக மாறுகிறது. 

    டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்: -

    டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், நிறுவன ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    அதில், ஒப்பந்தம் முடிந்தது, இதன் பின்னர் டிவிட்டர் எந்த திசையில் பயணிக்கும் எனத் தெரியாது. மேலும் இதன் எதிர்காலம் நிச்சயமற்றது என்றும் தற்சமயம் ஆட்கள் குறைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே, எலான் மஸ்க் கூடிய விரைவில், டிவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    கடந்த சில ஆண்டுகளாகவே எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளில் சுதந்திரம் இல்லை என கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனத்தையே அவர் முழுவதுமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதன் பயனாளர்கள் #leavingtwitter என்ற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

     

    Leave A Comment